தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சூர்யா. பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன் என்ற பின்னணியில்  திரைக்குள் நுழைந்தாலும் தனது விடாமுயற்சியாலும், உழைப்பாலும் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி இன்று இந்த நிலைமையை அடைந்துள்ளார். ஒரு நடிகராக மட்டுமின்றி 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் ஏராளமான திரைப்படங்களை தயாரிக்கும் முன்னணி தயாரிப்பாளராகவும், அகரம் என பெயரில் சமூகநல செயல்பாட்டாளராகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளார். 


 



உறுதிப்படுத்தப்படும் வதந்தி :


தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி பாலிவுட் திரைப்படங்களையும் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வந்த சூர்யா விரைவில் மும்பையில் செட்டில்லாக உள்ளார் என்ற தகவல்கள் ஏற்கனவே இணையத்தில் சில மாதங்களுக்கு முன்னர் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள தகவல் ஒன்று அதனை உறுதி செய்துள்ளது. 


70 கோடியில் அப்பார்ட்மெண்ட் :


நடிகர் சூர்யா மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 9000 சதுர அடி கொண்ட அபார்ட்மெண்ட் ஒன்றை 70 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி மும்பையிலேயே வேறு ஒரு இடத்தில் வீடு ஒன்றையும் வாங்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த புதிய அபார்ட்மெண்ட் கெஸ்ட் ஹவுஸ்ஸாக பயன்படுத்தப்படும் என்றும் அவரின் குடும்ப உறவினர்கள் வந்தால் அவர்கள் தங்குவதற்காக அந்த அபார்ட்மெண்ட் பயன்படுத்தப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. 


 



முடிவுக்கு என்ன காரணம்:


நடிகர் சூர்யா தனது குடும்பத்துடன் மும்பையில் குடியேற உள்ளார். தனது மகள் தியாவிற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சூர்யாவின் மகள் தியா மும்பையில் உள்ள ஒரு பிரபலமான கல்லுரியில் மேல் படிப்பை தொடரவுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அது மட்டுமின்றி படங்களுக்கான ஸ்கிரிப்ட் கேட்பது, அங்கிருந்து வந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வது, தயாரிப்பு பணிகளை மேற்கொள்வது என அனைத்தையும் அங்கிருந்தே செய்ய திட்டமிட்டுள்ளார். எனவே இனி நடிகர் சூர்யாவை சென்னையில் பார்ப்பது என்பது கடினமான ஒரு விஷயமாகிவிடும் என்பதால் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர் சூர்யா ரசிகர்கள். 


விறுவிறுப்பாக நடைபெறும் சூர்யா 42 படப்பிடிப்பு:


நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கும் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படம் 3 மடங்கு அதிகமான பட்ஜெட்டை கொண்டு பிரமாண்டமாக உருவாகி வருகிறது. சமீபகாலமாக சூர்யா மெயின் ரோலில் அல்லாமல் கெஸ்ட் ரோலில் ராக்கெட்ரி, விக்ரம் உள்ளிட்ட படங்களில் காணப்பட்டார். ஒரு இடைவேளைக்கு பிறகு சூர்யா 42 திரைப்படம் உருவாகி வருவதால் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர் சூர்யா ரசிகர்கள்.