பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு உடல்நலக்குறைவால் இன்று காலை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

பிரபல சமையல் கலைஞரான செஃப் தாமு என்ற  தாமோதரன். 1954ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி பிறந்தார். ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில் நுட்பத்தில் கல்வி பயின்றவர். சமையல் கலைஞராக மட்டுமின்றி கல்வியாளராகவும் நூல் ஆசிரியராகவும் தங்கள் பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளார். 2004-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட உணவக மேலாண்மை மற்றும் சமையல் கலைத் தொழில்நுட்பத்தில் முனைவர் பெற்ற முதல் இந்தியச் சமையல்காரர் என்ற பெருமையையும் பெற்றார்.

கின்னஸ் சாதனை

இவர் 2010ம் ஆண்டில் தொடர்ந்து 24 மணி நேரத்திற்கும் மேலாக சமையல் செய்து, 617-க்கும் மேற்பட்ட உணவுகளைத் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தார். சமையல் கலை மற்றும் உணவியல் துறைக்கு ஆற்றிய மிகச்சிறந்த பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது 2025ம் ஆண்டு வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. 

Continues below advertisement

இதையும் படிங்க: என் மகனுக்காக எதையும் செய்யவில்லை...வருத்தம் தெரிவித்த தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம்

குக் வித் கோமாளி

குறிப்பாக விஜய் தொலைக்காட்சியின் 'குக் வித் கோமாளி' (Cooku with Comali) நிகழ்ச்சியில் நடுவராகப் பணியாற்றிப் பெரும் புகழ்பெற்றார். அதற்கு முன் 'அறுசுவை நேரம்', 'சுவையோ சுவை' போன்ற பல்வேறு சமையல் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். மேலும் கள்ளப்படம், உள்குத்து, ஒரு பக்கக் கதை போன்ற திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றி நடித்துள்ளார்.

இதையும் படிங்க: Jailer 2: அலப்பறை கிளப்பும் ரஜினி ஃபேன்ஸ்..! 600 கோடி கல்லா கட்டியும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடும் ஜெயிலர் 2

உடல்குறைவால் உயிரிழப்பு

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே உடல்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செஃப் தாமு (72) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.

ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம் செஃப் தாமு காலமானதாக வதந்தி பரவியது. அப்போது தாமுவே வீடியோ வெளியிட்டு, தான் நலமுடன் இருப்பதாக விளக்கமளித்திருந்தார்.