தமிழ் சினிமாவின் தன்னிகரில்லா தெய்வக் குரலோன் டி.எம். சௌந்தராஜனின் 102வது பிறந்ததினம் இன்று. இன்றைய தினத்தில் அவரைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்! 



  •  இசை சக்கரவர்த்தி, சிம்மக்குரலோன், பாடகர் திலகம், குரலரசர் இப்படி பல பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்ட டி.எம்.எஸ் ஒரு சௌராஷ்டிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்.

  •  எஸ்.வி. சுப்பையா நாயுடு இசையில் 1946ஆம் ஆண்டு வெளியான 'கிருஷ்ணாவிஜயம்' படத்தின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார். ராதே நீ என்னை விட்டு போகாதேடி... தான் அவரின் குரலில் ஒலித்த முதல் திரைப்பாடல்.


 




  •  1954ஆம் ஆண்டு சிவாஜியின் நடிப்பில் வெளியான 'தூக்குத்தூக்கி' படத்தில் இடம்பெற்ற எட்டு பாடல்களையும் டி.எம்.எஸ் தான் பாடி இருந்தார்.

  •  எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்டோருக்கு அதிக அளவிலான பாடல்களை பாடியுள்ளார்.

  •  திரையிசை பாடல்கள் மட்டுமின்றி பக்தி பாடல்கள், கர்நாடிக் பாடல்கள், லைட் மியூசிக் என 10,000க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும் 3,000க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். தன்னுடைய 24 வயதில் பாடத் தொடங்கிய டி.எம்.எஸ் 88 வயதில் கடைசி பாடலை பாடினார்.

  • அழகென்ற சொல்லுக்கு முருகா... உள்ளம் உருகுதையா என பல பக்தி பாடல்களை பாடி பக்தர்களின் உள்ளங்களை உருக வைக்க கூடியவர்.

  •  டி.எம்.எஸ். தமிழ் உச்சரிப்பும், குரல் வளமும் தனி சிறப்புமிக்கது. 65 ஆண்டுகாலமாக திரைத்துறையில் பாடகராக ஜொலித்தவர் டி.எம்.எஸ்.

  •  முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி வரிகளுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த 'செம்மொழியான தமிழ் மொழியாம்...' பாடலில் கூட  டி.எம்.எஸ் குரல் ஒலித்தது.

  •   எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற இரு ஜாம்பவான்களின் அடையாளமாக விளங்கிய பாடல்கள் அனைத்தையும் பாடியவர் டி.எம்.எஸ் தான். யாருக்காக பாடினாலும் அந்த நடிகரே பாடுவது போன்ற உணர்வை கொடுப்பது டி.எம்.எஸ் தனிச்சிறப்பு.

  • 65 ஆண்டுகள் பாடல்கள் பாடியவர். எத்தனை மொழிகளில் பாடி இருந்தாலும் தமிழ் மொழி தான் அவருக்கு போரையும் புகழையும் பெற்று தந்தது.

  •  அருணகிரிநாதர் என்ற திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்திருந்தார்.


 




  •  தியாகராஜ பாகவதர் வாழ்நாள் சாதனையாளர் விருது, பெல்ஜியத்தின் கவுரவ டாக்டர் பட்டம், தமிழக முதல்வர் மு. கருணாநிதி விருது, முதல்வர் ஜெயலலிதா அங்கீகார விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளார். 

  •  உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த டி.எம். எஸ், 2013ஆம் மே மாதம் 19ம் தேதி சிகிச்சைப் பலனின்றி தனது 90 வயதில் காலமானார். 

  • பாடலைக் கேட்டதும் இது டி.எம்.எஸ் பாடிய பாடல் என உடனே அடையாளம் காணக்கூடிய வகையில் அவரின் பாடல்கள் இருப்பது தனி சிறப்பு.  

  •  மென்மையான குரல் வளம் தான் சினிமாவில் ஈடுபடும் என்ற நம்பப்பட்ட இந்த திரையுலகில் தனது கணீர் குரலால் அனைத்து நம்பிக்கைகளையும் தவிடு பொடியாக்கி அரை நூற்றாண்டுகளாக கோலோச்சிய டி.எம்.எஸ் புகழ் என்றும் மேலோங்கி நிற்கும்.