நடிகர் கார்த்தியின் சர்தார் படத்தின் தமிழக திரயரங்க உரிமையை வாங்கியது ரெட் ஜெயிண்ட் நிறுவனம். தீபாவளிக்கு படம் ரிலீஸ்.
தமிழ் சினிமாவின் ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனம் மிக முக்கியமான தயாரிப்பு நிறுவனமாக உள்ளது. மிகப் பெரிய பட்ஜெட் படங்களை மிகவும் இலாவகமாக தயாரித்து, தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் வெளியிடுவதில் ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனம் மிகவும் முக்கிய இடத்தில் உள்ளது.
ரெட் ஜெயிண்ட் மூவீஸ் கடந்த 2008ம் ஆண்டு முதல் படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது. இதன் முதல் படம் தளபதி விஜய் நடித்து 2008ல் வெளியான குருவி. இதுவரை 18 படங்களை நேரடியாகவும், 30 படங்களுக்கு மேல் மற்ற தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்தும் தயாரித்துள்ளது.
இந்நிலையில் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தனது டிவிட்டர் தளத்தில், இன்று மாலை 7 மணிக்கு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிடுவதாக தெரிவித்தது. நடிகர் விஜயின் பிறந்த நாளுக்கு இன்னும் 10 தினங்கள் உள்ள நிலையில் ரெட் ஜெயிண்ட் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பையும் ஆவலையும் ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கபட்டது.
ஆனால் நடிகர் கார்த்தியின் சர்தார் படத்தின் தமிழக திரையரங்க உரிமையை வாங்கியதாக ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. தீபாவளிக்கு இப்படம் திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கார்த்தியின் ரசிகர்கள் பெரும் குஷியில் இருக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்