தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான ரசிகர்கள் பட்டாளத்தை  வைத்திருப்பவர் நடிகர் சிலம்பரசன். ரசிகர்களால் STR என அழைக்கப்படும் சிம்பு, பலவிதமான விமர்சனங்களை எதிர்க்கொண்டாலும்  அதை வெளிப்படையாக  ஒப்புக்கொள்ளும் விதமே அவரை ரசிகர்கள் கொண்டாட காரணம். சில காலங்கள் சினிமா வாய்ப்புகள் பெரிதும் இல்லாமல் இருந்த சிம்பு, உடல் எடையை குறைத்து “ ஈஸ்வரன்” படம் மூலம்  கம் பேக் கொடுத்தார்.



 

ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை சிம்புவிற்கு கொடுக்கவில்லை என்றாலும் அந்த படத்திற்கான சிம்புவின் மென கெடல்களை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்நிலையில் வெங்கட் பிரபுவுடன் சிம்பு இணைந்திருக்கும் அடுத்த படமான ‘மாநாடு’ மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உள்ளது. மாநாடு படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் மும்மரமாக நடைப்பெற்று வருகிறது. தற்போது வெந்து தணிந்தது காடு இரண்டாவது போஸ்டர் வெளியான நிலையில் சிம்புவின் கையில் ஆப்பிள் வாட்ச் கட்டப்பட்டதாக இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.



 

கடந்த காலங்களில் நடிகர் சிம்பு படப்பிடிப்புகளில் சரியாக கலந்து கொள்ளாததால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன.  அவரது நடவடிக்கையால் நான்கு தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும், இதனால் அவரின் படங்களில் பெப்சி தொழிலாளர்கள் பணியாற்ற கூடாது எனவும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை ஏற்று கொள்ளப்பட்டதாக பெப்சி அறிவித்தது.  இந்த நிலையில் இயக்குநர் கவுதம் மேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாகும் வெந்து தணிந்தது காடு படத்தில் பெப்சி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதனால் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த சிலம்பரசனின் தாயார் உஷா, மகனின் வளர்ச்சி பிடிக்காமல் சிலர் இப்படி செய்வதாக குற்றம் சாட்டினார்.




 

இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடிகர் சிம்புவுக்கு விதித்த ரெட் கார்டை நீக்கியுள்ளது.  வெந்து தணிந்தது காடு படத்துக்கு பெப்சி தொழிலாளர் சங்கம் ஒத்துழைப்பு அளிக்கும் என அறிவித்துள்ளது. திரைப்பட படப்பிடிப்புகளில் சரிவர கலந்து கொள்ளாததால் நஷ்டம் அடைந்ததாக மைக்கேல் ராயப்பன் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.  இந்த வழக்கு பற்றி நீதிமன்றத்தில் முடிவு செய்யப்படும் என தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 

 



 

ரெட் கார்டு நீக்கப்பட்ட நிலையில், நடிகர் சிம்புவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் நடிகர் சிம்புவிற்கு நடிகர் சங்கம் வழங்கபட்ட ரெக்கார்டு நீக்கப்பட்டதை தொடர்ந்து மதுரை தெப்பக்குளம் பகுதியில் அவருடைய ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நடிகர் சிம்புவிற்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டை நீக்கம் செய்த நடிகர் சங்கத்திற்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் நன்றி தெரிவித்து பேனர்களை கையில் ஏந்தி, சிம்புவுக்கு வாழ்த்து தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.