வாடகைத்தாய் வழியாகத் தங்களுக்கு குழந்தை பிறந்துள்ளதாக நடிகர் பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் தம்பதியினர் அறிவித்துள்ளனர். அவர்களது இந்த அறிவிப்பு பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. வாடகைத்தாய் மூலம் குழந்தை பிறந்துள்ளது என்றும் தங்களது ப்ரைவசியைக் கருத்தில் கொண்டு தனித்து விடும்படியும் பிரியங்கா-நிக் பதிவிட்டிருந்தனர். ஆனால் சோஷியல் மீடியா உலகம் அவர்களை அப்படி விடுவதாக இல்லை. 






குறிப்பாக இதுகுறித்து எழுத்தாளர் கவிஞர் தஸ்லிமா நஸ்ரினின் கருத்து பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இது குறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘வறுமையில் இருப்பவர்களை பணக்காரர்கள் உபயோகித்துக் கொள்வதற்காகவே வாடகைத்தாய் முறை உருவாகியுள்ளது. குழந்தை வேண்டும் என்பவர்கள் பிள்ளையை தத்தெடுக்கலாமே. தன்னுடைய ஜீன் தான் பிள்ளையில் வேண்டும் என எதிர்பார்ப்பது சுயநலம். இப்படி வாடகைத்தாய் மூலம் ரெடிமேட் குழந்தைகளை பெற்றுக்கொள்பவர்கள் ஒரு அம்மாவாக எப்படி உணர்வார்கள்? குழந்தையை பெற்றவர்களுக்கு இருக்கும் உணர்வே அவர்களுக்கும் இருக்குமா?’ எனச் சராமரியாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.










இது அவரவர் விருப்பம். சிலர் மருத்துவக் காரணங்களுக்காகத்தான் வாடகைத்தாயை நாடுகிறார்கள் எனச் சிலர் அதில் கருத்து கூறியிருந்தனர்.