தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே தனியார் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் 2 படித்த மாணவி பள்ளி அருகே உள்ள விடுதியில் உள்ள அறைகளை சுத்தம் செய்ய வார்டன் வற்புறுத்தியதாகவும், இதனால் மன உழைச்சல் ஏற்பட்டு பூச்சி மருந்து குடித்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 19 ஆம் தேதி மாலை உயிரிழந்தார். இது தொடர்பாக மாணவி சிகிச்சையின்போது அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரித்து வார்டன் சகாயமேரியை (62) கைது செய்தனர். இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சையின் போது, அவரிடம் எடுக்கப்பட்ட வீடியோ மதமாற்றம் செய்வது தொடர்பான சர்ச்சை தகவல்கள் வெளியானதால், இதில் தலையிட்டு பாஜகவினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மாணவி தற்கொலை செய்து கொண்டதை கண்டித்து பாஜக சார்பில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசுகையில்,
தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் முதல்வராக அன்று முதல், இந்துக்களுக்கு எதிராக சிலுவை யுத்தம் நடைபெற்று கொண்டிருக்கின்றது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஆன்டர்சன் பள்ளி, இதே போல் மாணவி படித்த பள்ளிக்கு தூய இருதயம் இல்லை, குப்பை, சாக்கடை இருதாயமாகும். இது போன்ற பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகளாக நடத்தப்பட்டு வருகின்றது. நம்முடைய வரி பணத்தில் நடைபெற்று கொண்டிருக்கின்றது. அரசு உதவி வழங்குவதை நிறுத்த வேண்டும். ஆன்டர்சன் பள்ளியில் மாணவர்கள் வீபூதி, ருத்திராட்சம் அணிந்து வந்தால், ரவுடிகள் மாதிரி இருக்கின்றது என்று அந்நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். நாம் எப்போதாவது பேன்ட் போட்டு மேலே பாவாடை போட்டிருப்பதை பற்றி கேட்டிருப்போமா. அந்த அயோக்கய பய பள்ளி நிர்வாகியை முதல்வர் ஸ்டாலின் ஏன் கைது செய்ய வில்லை.
தமிழகத்தில் நடைபெறும் அரசு சிஎஸ்ஐ அரசாகும். இதனை முதல்வர் ஸ்டாலினே சொல்லியுள்ளார். இந்து துரோக, விரோத ஸ்டாலின் அரசாங்கம், மதுரையில் முனிஸ்வரன் கோயிலை இடித்து விட்டார்கள். ரம்ஜானுக்கு கஞ்சி குடிக்கனும் என்றால், ஏ கிளாஸ் வரைட்டியில் ஆயிரக்கணக்கான டன் அரிசி கொடுக்கின்றார். ஆனால் இந்துக்களுக்கு பொங்கல் வைக்க வேண்டும் என்றால், தரமற்ற பொருட்களை வழங்குவார். இந்துக்களை அவ்வளவு கேவலமாக நினைக்கின்றார். புளியில் பல்லி இருந்ததற்கு, லஞ்சம் வாங்கி கொண்டு, பொருட்களை வாங்கி கொடுத்த கூட்டுறவு துறை அமைச்சர் சக்கரபாணி மீது, நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்திருக்க வேண்டும்.
மக்களின் ஆரோக்கியத்தை கெடுத்தற்காக ஸ்டாலின் அரசு, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம். கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் வாங்கி கொண்டு, ஏழை எளிய இந்து மக்களின் பண்டிகையில் தரமற்ற பொருட்களை கொடுக்கின்றார்கள். காஞ்சிபுரத்தில் கோயில் இடமான 22 ஏக்கர் நிலத்தை கிறிஸ்துவ ஸ்தாபனம் ஆக்கிரமித்து, தீம் பார்க் நடத்தி வருகின்றார்கள். உயர்நீதி மன்ற தீர்ப்பில் கோயிலுக்கு ஒன்பது கோடி கொடுக்கனும் சொல்லியுள்ளது. அரசு நான்கு வாரத்தில் 22 ஏக்கரை கிளீயர் செய்ய வேண்டும். அந்த இடத்தை ஸ்டாலின் ஏன் இடிக்க வில்லை.
காவல் துறையின் கேடு கெட்ட அரசாங்கம். அரசு அதிகாரிகள் முழுவதும் அறிவாலய அதிகாரிகளாக நினைத்து கொண்டிருக்கின்றார்கள். தற்போது மத்திய அரசிலிருந்து வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு அதிகாரிகள், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் அழைத்து கொள்வோம் என்றுள்ளது. இதற்கு திருமாவளவன் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் யாராவது ஒன்றிய அரசு என யாராவது சொன்னால், குஜராத், மணீப்பூருக்கு தேச பக்தி பற்றி பயிற்சி அளிக்க அழைத்துக்கொள்வார்கள். இந்தியாவில் 1947 ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி நமக்கெல்லாம் அரசியல் சுதந்திரம் கிடைத்தது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள இந்துக்களுக்கு மத சுதந்திரம் கிடைக்க வில்லை. மத சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்றால், மத வியாபாரிகளை சிறையில் அடைக்க வேண்டும். அதற்காக மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரவேண்டும். அதற்காக தொடர்ந்து போராடுவோம்.