ஒட்டுமொத்த பாலிவுட்டின் கவனத்தையும் ஈர்த்து லைக்ஸ் அள்ளிய க்யூட் ஜோடி கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடி. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் கடந்த 7ம் தேதி இவர்களது திருமணம் கொண்டாட்டமாக நடைபெற்று முடிந்த நிலையில், அன்றைய நாளே புகைப்படங்கள் வெளியாகி சோஷியல் மீடியா சென்சேஷனாக மாறின. உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே சூழ இத்திருமணம் நடைபெற்று முடிந்தது. 


 



சர்ப்ரைஸ் செய்த படக்குழு :


பாலிவுட் பிரபலங்கள் பலரும் இந்த புது மணத்தம்பதியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இயக்குனர் ஷங்கரின் ஆர்.சி. 15 படக்குழு மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்தது கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடிக்கு பூத்தூவி தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்களின் இந்த வாழ்த்து வீடியோ சோசியல் மீடியாவில் லைக்ஸ்களை குவித்து மிகவும் வைரலாக பகிரப்பட்டும் வருகிறது. 


 






 


ஆர்.சி.15 :


இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி ஆகியோர் நடித்து வரும் பிரமாண்டமான திரைப்படம் ஆர்.சி.15. மூன்று மொழிகளில் உருவாக்க வரும் இப்படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தில் ராஜு தயாரித்து வருகிறார். இந்த நிறுவனத்தின் 50வது தயாரிப்பு இதுவாகும். அந்த வகையில் ஆர்.சி. 15 திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் கியாரா அத்வானி தனது நீண்ட நாள் காதலர் மற்றும் பிரபல பாலிவுட் நடிகரான சித்தார்த் மல்ஹோத்ராவினை திருமணம்  செய்து கொண்டார்.


 






திரையை பகிர்ந்த ஜோடி : 


2018ம் ஆண்டு 'லஸ்ட் ஸ்டோரிஸ்' என்ற ஆந்தாலாஜி திரைப்படம் மூலம் கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா திரைப்படம் மூலம் திரையை பகிர்ந்த இந்த ஜோடி அதனை தொடர்ந்து பில்லா, ஆரம்பம், செர்ஷா உள்ளிட்ட திரைப்படங்களில் இணைந்து நடித்தனர். இருவருக்கும் இடையே காதல் என பல கிசுகிசுக்கள் எழுந்து வந்த நிலையில் இருவரும் தற்போது கணவன் மனைவியாக இணைந்துள்ளனர்.