பிரபல சீரியல் நடிகை மஹாலட்சுமி  ரவீந்தர் தன்னிடம் தனது காதலை வெளிப்படுத்துவதே இல்லை என்று பேசியிருக்கிறார்.


கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி இணையம் முழுவதும் ஒரு தம்பதி திருமணம் பற்றிய பேச்சுக்களே அதிகம் இடம் பெற்றிருந்தது. அது பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் - நடிகை மகாலட்சுமி கல்யாணம்.


சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி ரசிகர்களிடத்தில் நன்கு பிரபலமானவர் மகாலட்சுமி. ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற இவர்  சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். ராதிகா நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியல் மூலம் மகாலட்சுமியின் சின்னத்திரை பயணத்தில் மிக முக்கியமானதாக அமைந்தது. 


தற்போது சன் டிவியில் அன்பே வா சீரியலில் நடித்து வரும் மகாலட்சுமி, தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவிந்திரன் சந்திரசேகரை திருமணம் செய்துக் கொண்ட தகவலை பலராலும் கற்பனை செய்துக் கொள்ள கூட முடியவில்லை. அதிக பருமனாக இருக்கும் அவரை மகாலட்சுமி பணத்துக்காக திருமணம் செய்துக் கொண்டதாக இணையத்தில் கடுமையான விமர்சனம் எழுந்தது. பலரும் 90 கிட்ஸ்கள் சாபம் சும்மா விடாது என சகட்டுமேனிக்கு ரவீந்தரை திட்டி தீர்த்தனர்.  


 










திருப்பதியில் நடந்த இந்த திருமணம் காதல் திருமணம் ஆகும். கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகளாக காதல் இருந்து வந்ததாகவும், தற்போது திருமணத்தில் முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் திருமண போட்டோக்களை பதிவிட்டு ரவீந்தர், மஹாலட்சுமி போல ஒரு பொண்ணு கிடச்சா வாழ்க்கை நல்லா இருக்குனு சொல்லவாங்க..,ஆனா அந்த மகாலட்சுமியே வாழ்க்கையை கிடச்சா...என பதிவிட்டார். இதேபோல் மகாலட்சுமி என் வாழ்க்கையில் நீ கிடைத்ததால் நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.


உன் அன்பினால் என் வாழ்க்கையை நிரப்புகிறாய். லவ் யூ அம்மு என தெரிவித்திருந்தார்.இவரது கல்யாணத்திற்கு தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்கள் வந்த நிலையில், பல யூடியூப் சேனல்களுக்கு இருவரும் பேட்டியளித்தனர். அவை சமூகவலைதளங்களில் வைரலும் ஆனது. இந்த நிலையில் அந்த வரிசையில் தற்போது விஜய் டிவியும் களமிறங்கியுள்ளது. அது தொடர்பான புரோமோவும் வெளியிடப்பட்டுள்ளது.


 






அந்த புரோமோவில் ரவீந்தரும், அவரது மனையான மஹாலட்சுமியின் தங்களது காதல், அதன் பின்னர் நடந்த திருமணம் சார்ந்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது தொகுப்பாளர் யார் இதில் அதிகமாக ஐ லவ் யூ சொல்வீர்கள் என்று கேட்க, மஹாலட்சுமி அவர் சொல்லவே மாட்டார் என்று கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


முன்னதாக பணத்திற்காகத்தான் மஹாலட்சுமி  ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என பலர் பேசி வந்த நிலையில், அந்த விவகாரத்திற்கு அவர்கள் அளித்த விளக்கம் பரபரப்பாக பேசப்பட்டது. அப்போது பேசிய அவர்கள், “ மகாலட்சுமி பணத்துக்காக கல்யாணம் பண்ணதா சொல்றீங்க..பணத்துக்காக பண்ணிருந்தாங்கன்னா என்னை விட எத்தனை பேரு நல்லா இருக்காங்களே. என்னை எதுக்கு பண்ணனும் என கேள்வியெழுப்பினார்.


இது முழுக்க முழுக்க நிச்சயிக்கப்பட்ட காதல் திருமணம் தான். நான் கூட எடையை குறைச்சிட்டு வாரேன்னு சொன்னேன். ஆனால் அதெல்லாம் தேவையில்லைன்னு சொல்லிட்டாங்க என ரவீந்தர் தெரிவித்துள்ளார். மகாலட்சுமி பேசும் போது, தான் திருமணத்திற்கு முதல் நாள் வரை ஷூட்டிங்கில் இருந்ததாகவும், மறுநாள் திருமண போட்டோ பார்த்து தான் அனைவரும் ஆச்சரியப்பட்டு விசாரித்ததாகவும்  தெரிவித்து இருந்தார்.