20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் ஜெயம் ரவி, 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ரவி மோகன் நடிப்பில் கராத்தே பாபு, ஜீனி ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கு. ரவி மோகனின் 34 வது படமான கராத்தே பாபு படத்தை, தாதா குறித்த படங்களுக்குப் பெயர் போன கணேஷ் கே. பாபு எழுதி இயக்கியுள்ளார். ஆர்.கே.நகர் தேர்தல் களத்தை மையமாகக் கொண்ட இந்த படத்தில், அந்த தேர்தலில் போட்டியிடும் எம்.எல்.ஏ.வாக ரவி மோகன் நடித்துள்ளார்.
அடுத்ததாக ஜீனி திரைப்படம் வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் 100 கோடி ரூபாய் மெகா பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. புவனேஷ் அர்ஜூனன் என்ற புது இயக்குநருடைய ஃபேண்டசி திரைப்படத்தில் ரவி மோகன் ஹீரோவாகவும் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். ரவி மோகனுடைய திரைப்பயணத்திலேயே இந்த படம் மிகவும் முக்கியமானதாக இருக்கும் எனக்கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தில் வில்லன் அவதாரமும் எடுத்திருக்கிறார். இதனால் ரவி மோகனுடைய வில்லத்தனத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலோட காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
இந்த படங்களுக்கு பிறகு ரவிமோகன் அவரின் நீண்ட கால ஆசையான இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். இந்த ஆண்டிற்குள் இந்த படத்திற்கான படபிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளார். இந்த திரைப்படத்தை ரவியே தயாரித்து இயக்குகிறார். மேலும் இந்த படத்தின் கதாநாயகனாக யோகி பாபு நடிப்பது உறுதியாகியுள்ளது. இருவரும் இணைந்து கோமாளி படத்தில் நண்பர்களாக நடித்தனர். பல படங்களில் நடித்துள்ளனர். இந்த படம் காமெடியுடன் கூடிய எமோஷனல் கதைகள் உருவாதாக கூறப்படுகிறது.