ஆர்த்தியை தாக்கிய கெனிஷா
நடிகர் ரவி மோகன் மற்றும் கெனிஷா பிரான்சிஸ் திருமண நிகழ்வு ஒன்றில் சேர்ந்து கலந்துகொண்டது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கெனிஷா என பலர் அவரை குற்றம் சாட்டினர். அதே நேரம் ஆர்த்தி ரவி வெளியிட்ட அறிக்கையில் இரண்டு குழந்தைகளும் தான் தனியாக கஷ்டப்படுவதாக தெரிவித்திருந்தார் . இதனால் இணையத்தில் ரசிகர்கள் இரு தரப்புகளாக பிரிந்து இரு தரப்பினருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் ஆர்த்தி ரவியை குறிக்கும் விதமாக கெனிஷா பதிவிட்டுள்ளார்
இப்படி ஒரு பெண்ணோடு வாழவே முடியாது
கெனிஷா பிரான்சிஸ் பதிவிட்டுள்ள ஸ்டோரியில் " ஒரு ஆண்மகன் கலவரமான உணர்ச்சிகளைக் கொண்ட பெண்ணிடம் ஈர்க்கப்பட மாட்டார். அவனுக்கு அமைதியை கொடுக்கும் பெண்ணிடமே அவன் இதயம் செல்லும். இந்த பெண்ணின் கனிவு என்பது ஒரு பாவனையாக இருக்காது. அது ஒரு பெரிய சக்தியாக இருக்கும். அவனுடன் போட்டி போட நினைக்காது அவனை சமநிலையோடி வைத்திருக்க உதவும் . அப்படி இருக்கையில் இருவரும் அவரவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள். " என அவர் பதிவிட்டுள்ளார்.
ரவி மோகன் ஆர்த்தி விவாகரத்து
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் கடந்த ஆண்டு விவாகரத்தை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஆர்த்தி மற்றும் ரவி குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவின. ரவியின் சொத்துக்களை அபகரித்து அவரை திருமண வாழ்க்கையில் மரியாதையின்றி நடத்தியதாகவும் இதனால் ரவி மோகன் இந்த விவாகரத்தை முன்னெடுத்ததாகவும் கூறப்பட்டது. அதே போல் ரவி மோகனுக்கும் கெனிஷா பிரான்சிஸ் என்கிற பாடகிக்கும் இடையில் காதல் தொடர்பே இந்த விவாகரத்திற்கான காரணம் என்றும் கூறப்பட்டது. ஆனால் தனக்கும் கெனிஷாவுக்கும் இடையில் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும் இருவரும் நல்ல நண்பர்கள் என்றும் ரவி மோகன் கூறியிருந்தார்