நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படங்களைப் பார்க்கலாம்.


ரத்தம்


மிர்ச்சி சிவா  நடித்து  வெளியான தமிழ் படம் 1 மற்றும் 2 ஆம் பாகங்களை இயக்கிய சி.எஸ் அமுதன் இயக்கியிருக்கும் படம் ரத்தம். விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா , ரம்யா நம்பீசன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ளார்கள். கண்ணன் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ரத்தம் திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவணத்தை ஈர்த்தது. முன்னதாக செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப் பட்டு பின் ஒரு சில சிக்கல்களால்  நாளை அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.


தி ரோட்


  நடிகை த்ரிஷா சோலோவாக  நடித்திருக்கும் திரைப்படம் தி ரோட். அருண் வசீகரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ் , விவேக் பிரசன்னா , நேஹா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். நாளை அக்டோபர் 6 ஆம் தேதி தி ரோட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.


இருகபற்று


யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீ, விதார்த், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபர்ணதி, சானியா ஐயப்பன், மனோபாலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “இறுகப்பற்று”  ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படம் அக்டோபர் 6 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ஏற்கனவே இந்த படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றிருந்த நிலையில் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.


800


கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் 800. முத்தையா முரளிதரன் 800 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியதை நினைவுகூறும் வகையில் இந்த படத்திற்கு 800 என்று பெயரிடப்பட்டுள்ளது. 800 படத்தை மூவி டிரெய்ன் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் விவேக் ரங்காச்சாரி தயாரித்துள்ளதாக ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் இப்படம் நாளை வெளியாகவுள்ளது.


சாட் பூட் த்ரி


அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் யோகி பாபு , கைலாஷ் ஹீத் , ஷிவாங்கி கிருஷ்ணகுமார் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கும் திரைப்படம் ஷாட் பூட் த்ரி. நாளை திரையரங்கில் வெளியாகிறது.


எனக்கு எண்டே கிடையாது


விக்ரம் ரமேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் எனக்கு எண்டே கிடையாது. விக்ரம் ரமேஷ், ஸ்வயம் சித்தா, கார்த்திக் வெங்கடராமன் , ஷிவராஜ்குமார் ராஜு உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். மிஸ்ட்ரி த்ரில்லராக உருவாகி இருக்கும் இந்தப் இன்று வெளியாக இருக்கிறது.


மிஷன் ரானிகஞ்ச்


தினு சுரேஷ் தேசாய் இயக்கத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், பரினீத்தி சோப்ரா, ரவி கிஷன் , குமுத் மிஷ்ரா, பவன் மல்ஹோத்ரா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள திரைப்படம் மிஷன் ரானிகஞ்ச். 1989 ஆம் வருடம் ரானிகஞ்சில் நிகழ்ந்த நிலக்கரி சுரங்க விபத்தை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்தப் படம் இன்று அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.