கன்னட சினிமாவில் தொடங்கி டோலிவுட், பாலிவுட் என படு பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா, விஜய்யுடன் வாரிசு படம் மூலம் கோலிவுட்டில் பிரம்மாண்ட எண்ட்ரி கொடுக்க உள்ளார்.


டோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தபோது ராஷ்மிகா நேஷனல் க்ரஷ்ஷாக கொண்டாடப்பட்ட நிலையில், கீத கோவிந்தம், டியர் காம்ரேட், சரிலேரு நீகெவரு படங்களின் மூலம் தெலுங்கு சினிமா ரசிகர்களின் டார்லிங்காக மாறிப்போனார் ராஷ்மிகா.


அதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜூனுடன் ராஷ்மிகா ஜோடி சேர்ந்த பான் இந்தியா படமான புஷ்பா, அவரை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்த்தது.


புஷ்பா படத்துக்கு ராஷ்மிகா 3 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது வாரிசு படத்துக்கு ராஷ்மிகா 4 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


மேலும் பாலிவுட்டில் குட்பை படத்தைத் தொடர்ந்து, மிஷன் மஞ்சு படத்தில் தற்போது நடித்து வரும் ராஷ்மிகா, இந்தியில் 5 கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இந்நிலையில், வாரிசு படம் ஹிட் அடித்தால் ராஷ்மிகா மேலும் தன் சம்பளத்தை உயர்த்தலாம் என கிசுகிசுக்கின்றனர் கோலிவுட் வட்டாரத்தினர். 


சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா


கன்னட சினிமா மூலமாக ஹீரோயினாக திரை வாழ்வைத் தொடங்கிய ராஷ்மிகா முன்னதாக பிளாக்பஸ்டர் கன்னட சினிமாவான காந்தாரா படத்தைப் பார்க்கவில்லை எனக் கூறியது முன்னதாக பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.


காந்தாரா படத்தை தான் பார்க்கவில்லை என்று கூறியதோடு, ரக்‌ஷித் ஷெட்டியுடன் நடித்த படத்தை பற்றி பேசியபோது, அவரின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை சொல்ல மறுத்தார்.


இதற்கு பதிலடி தெரிவிக்கும் விதமாக காந்தாரா பட இயக்குநரும் ஹீரோவுமான ரிஷப் ஷெட்டி தன் நேர்காணலில் ராஷ்மிகாவை அலட்சியப்படுத்தும் விதமாக பதிலளித்தார்.


 இதற்கு பதிலளிக்கும்விதமாக தம் பேட்டி ஒன்றில் பேசிய ராஷ்மிகா, “தற்போது மீண்டும் பேட்டி கொடுத்துள்ள ராஷ்மிகா,  “நான் நானாக இருக்கிறேன். இதுதான் என்னுடைய பண்பு. அனைவரும் என்னை பார்க்கிறார்கள் என்பதற்காக என்னால் கேமராவை தாண்டி நடிக்க முடியாது. என்னை போல் இருப்பவர்களை பார்க்கும் போது எனக்கு மனநிறைவாக உள்ளது.” என்று பேசியுள்ளார்.


 






அதுபோக, மேடை நிகழ்ச்சி ஒன்றில் ராஷ்மிகா பேசும்போது, "எனக்கு சினிமா பின்னணி கிடையாது. நானாகவே வளர்ந்து இங்கு நிற்கிறேன். என் வீட்டில் உள்ள குடும்பத்தினருடன் நான் போராடியுள்ளேன். ஒரு பெண்ணாக சினிமா துறையில் நீடிப்பது மிகவும் கஷ்டமான விஷயம்" எனப் பேசியுள்ளார்.