திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற நடிகை ராஷ்மிகா மந்தனா காலில் விழுந்து மணமக்கள் ஆசீர்வாதம் பெற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நடிகை ராஷ்மிகா:

கன்னடத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா இன்றைக்கு அனைத்து மொழி ரசிகர்களிடத்திலும் மிகப் பிரபலமாக திகழ்கிறார்.  2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதனையடுத்து சரிலேரு நீகேவ்வாரு, பீஷ்மா, புஷ்பா என பல படங்களில் நடித்த ராஷ்மிகா, தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தின் மூலம்  அறிமுகமானார். 

Irumbu Kai Mayavi: இன்னும் கொஞ்ச நாள்தான்.. லோகேஷின் 10 வருட கனவு.. சூர்யாவிடம் மீண்டும் கதை சொன்ன லோகேஷ்!

இதனைத் தொடர்ந்து ,மிஷன் மஜ்னு, டியர் காம்ரேட், சீதாராமம், விஜய் ஜோடியாக அவர் நடித்த வாரிசு திரைப்படம் என அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக ராஷ்மிகா நடிப்பில், புஷ்பா 2, அனிமல்,  தனுஷின் 51வது படம் என வரிசையாக வெளிவர உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படியான நிலையில் ராஷ்மிகாவை சுற்றி சர்ச்சையான பல சம்பவங்களும் வரத் தான் செய்கின்றது. 

ராஷ்மிகாவின் காலில் விழுந்த மணமக்கள்:

ரசிகர்களால் “நேஷனல் கிரஷ்” என கொண்டாடப்படும் ராஷ்மிகாவை சமூக வலைத்தளத்தில் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர் இணையவாசிகள். ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் வழக்கம்போல சமூக வலைத்தளங்களில் போஸ்ட்டுகளை பதிவிட்டு தனது ரசிகர்களை ராஷ்மிகா மகிழ்ச்சிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் கூட தான் பேமஸாக காரணமாக அமைந்த “கீதா கோவிந்தம்” படம் 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடினார்.

இப்படி இருக்கையில் ராஷ்மிகா மந்தானா, தனது உதவியாளர் சாய் பாபுவின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது அவர் மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்து தெரிவித்தார். ஆனால் சற்றும் எதிர்பாராதவிதமாக மணமக்கள் இருவரும் ராஷ்மிகாவின் காலில் விழுந்தனர். இதனைப் பார்த்ததும் ராஷ்மிகா என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


மேலும் படிக்க:  200 வருட பகை.. வெளியே வந்த பாம்பு.. மிரட்டும் வேட்டையன் ராஜா.. சந்திரமுகி 2 டிரெய்லர் ரிலீஸ்..!