நடிகர் சூர்யாவிடம் 'இரும்புக்கை மாயாவி' படத்தின் மேம்படுத்தப்பட்ட கதையை  இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.


லோகேஷ் கனகராஜ்


லியோ படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் லோகேஷ் கனகராக அதே நேரத்தில் தனது கனவுப்படமான இரும்புக்கை மாயாவி படத்திற்கான வேலைகளையும் செய்து வருகிறார். கைதி, விக்ரம் லியோ படங்களுக்கு முன்பாகவே லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தின் கதையை சொல்லியிருந்தும் அன்றைய சூழலில் இந்தப் படத்தை எடுப்பதற்கு பல்வேறு சிக்கல்கள் இருந்ததால் இந்த முயற்சியை அவர் கைவிட்டார். கடந்த 10 ஆண்டுகாலமாக இந்தப் படத்திற்கான திரைக்கதையை மீண்டும் திருத்தி புதிய விஷயங்களை சேர்த்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்


இரும்புக்கை மாயாவியின் கதை


சமீபத்தில் சூர்யாவிடம் இரும்புக்கை மாயாவி படத்திற்கான திருத்தப்பட்ட திரைக்கதையை லோகேஷ் கனகராஜிடன் சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 1962ஆம் ஆண்டு டி.சி. காமிக்ஸில் இடம்பெற்ற  ‘த ஸ்டீல் க்ளா’ (the steel claw ) என்கிற கதாபாத்திரத்தைத் தழுவி இந்தப் படத்தின் கதை அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.


விபத்து ஒன்றில் தனது கையை இழக்கும் ஒருவனுக்கு செயற்கை கை பொருத்தப்படுவதாகவும் பின் எதிர்பாராத நிகழ்வு ஒன்றால் சூப்பர் பவர்களை பெறுவதும் இந்தப் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. மேலும் தமிழில் இதுவரை யாரும் பார்த்திராத ஹாலிவுட் தரத்தில் இந்தப் படத்தை உருவாக்க லோகேஷ் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தற்போது தான் இயக்க இருக்கும் படங்களின் வேலைகளை முடித்துவிட்டு இந்தப் படத்திற்கான முன்னெடுப்புகள் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.






ரோலக்ஸ்


மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூர்யா. இந்தக் கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தற்போது ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மையமாக வைத்து முழு நீளப் படம் ஒன்றையும் எடுக்க இருக்கிறார் லோகேஷ்.


லியோ


விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’ இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.