'கிரிக் பார்ட்டி' படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர்  நடிகை ராஷ்மிகா மந்தனா. அதை தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்று அடுத்தடுத்து வெளியான கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்கள் திருப்புமுனையாக அமைந்தது. தமிழ் சினிமாவில் சுல்தான் படம் மூலம் என்ட்ரி கொடுத்த அவர் அதை தொடர்ந்து 'வாரிசு' படத்தில் நடித்துள்ளார். 



தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் ஹிந்தி திரையுலகத்தில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார். மேலும் புஷ்பா, அனிமல், சீதா ராமம், குட் பை, மிஷன் மஜ்னு என பான் இந்திய அளவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக ராஷ்மிகா மந்தனா வளர்ந்து வருகிறார்.


குறைந்த காலத்தில் முன்னணி நடிகைகளுக்கு நிகரான ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று  ரசிகர்களால் நேஷனல் கிரஷ், எக்ஸ்பிரஷன் குயின் என கொண்டாடப்பட்டு வருகிறார். 


இந்தியில் நடிகர் ரன்பீர் கபூர் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்த 'அனிமல்' திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெளியானது. அப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பாக்ஸ் ஆஃபிஸில் 900 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. 



 


அனிமல் படம் குறித்து எக்ஸ் தள பக்கத்தில் ரசிகர் ஒருவர் விமர்சனம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அனிமல் படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் ரன்பீர் கபூர் இருவரும் பேசிக்கொள்ளும் காட்சியையும், ராஷ்மிகாவுக்கு பிறகு ட்ரிப்டி டிம்ரி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஜோயா உடன் பழகும் வீடியோவையும் எடிட் செய்த வீடியோ ஒன்றை பகிர்ந்து "ஒரு மனிதனை நம்புவதை விட பயங்கரமானது எதுவும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என பதிவிட்டு இருந்தார். 


சோசியல் மீடியாவில் என்றுமே ஆக்டிவாக இருக்கும்  ராஷ்மிகா மந்தனா, ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை பழக்கமாக கொண்டவர். எந்த கேள்வியாக இருந்தாலும் அதற்கு அவர் தயக்கம் காட்டியதே இல்லை. அதே போல அனிமல் படம் குறித்த ரசிகர்களின் விமர்சனத்துக்கும் ராஷ்மிகா பதில் அளித்துள்ளார். 






"ஒரு திருத்தும். முட்டாள் மனிதனை நம்புவதுதான் பயங்கரமானது. எத்தனையோ நல்ல உள்ளம் படைத்த மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களை நம்புவது எப்போதுமே ஸ்பெஷல்" என பதில் அளித்துள்ளார். ராஷ்மிகாவின் இந்த அதிரடியான பதில் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.