தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் அல்லு அர்ஹூன் கைது செய்யப்பட்டுள்ளது மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாக நடிகை ராஷ்மிகா மந்தனா வருத்தம் தெரிவித்துள்ளார்.


புஷ்பா- 2 திரைப்படம் வெளியாவதற்கு முன்பு, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின் போது அங்கு அல்லு அர்ஜூன் சென்றுள்ளார். அவரை காண ஏராளமான கூட்டம் கூடிவிட்டது. திரையிடப்பட்ட சிறப்புக் காட்சியை காண, கடந்த 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் காண சென்ற கவிதா (35) அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். மேலும், கூட்ட நெரிசலில் சிக்கிய அவரது 8 வயது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கூட்ட நெரிசலில் ஒருவர் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டார்.


ராஷ்மிகா மந்தனா எக்ஸ் தளப் பதிவு:


அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டுள்ள நிகழ்வு தொடர்பாக நடிகை ராஷ்மிகா மந்தனா கருத்து தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ்தளப் பதிவில்,” இந்தச் செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. திரையரங்கில் ஏற்பட்ட நிகழ்வு வேதனைக்குரியது; ஒருவரின் உயிரிழப்பு துர்திஷ்டவசமான ஒன்று. இருப்பினும், எல்லாவற்றிருக்கும் ஒருவர் மீது மட்டுமே பழி சொல்வது வேதனையளிக்கிறது.” என்று அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.


அல்லு அர்ஜூன் கைது:


கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன் மீது, ஹைதராபாத் காவல் துறையினர்  ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணைக்காக அல்லு அர்ஜூனை இன்று காவல்துறை கைது செய்தது.  போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் அல்லு அர்ஜூன் திரையரங்கத்திற்கு வந்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அல்லு அர்ஜூனை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க ஹைதராபாத் நாம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.






உயிரிழப்பு தொடர்பாக அல்லு அர்ஜூன் வீடியோ மூலம் வருத்தம் தெரிவித்திருந்தார்.உயிரிழிந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் வழங்குவதாக தெரிவித்தார். அவர்களது குடும்பத்தினருக்கு  உதவிகள் செய்ய தயார் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.



புஷ்பா- 2:


இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா - 2 திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி உலகளவில் வெளியானது. வெளியான 6 நாட்களில் ரூ.1002 கோடி வசூல் செய்துள்ள தகவலை படக்குழு அறிவித்தது. ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்த நிலையில், அல்லு அர்ஜூன் கைது செய்தி அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்கள் பலரும் சமூல வலைதளத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.