Rashmika mandanna Instagram: ராஷ்மிகாவுக்கு 20 மில்லியன் இன்ஸ்டா ஃபாலோயர்ஸ்! செம அப்டேட் இங்க இருக்கு..!

இதுவரை 19 மில்லியன் இன்ஸ்டா ஃபாலோயர்களைப் பெற்று நடிகர் சமந்தா முன்னனியில் இருந்த நிலையில் அவரைப் பின்னுக்குத் தள்ளி 20 மில்லியன் ஃபாலோயர்களுடன் இந்த எண்ணிக்கையை ராஷ்மிகா எட்டியுள்ளார்.

Continues below advertisement

நடிகர் ராஷ்மிகா மந்தனா 20 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை எட்டியுள்ளார். இதன்மூலம் இன்ஸ்டாகிராமில் இருக்கும் தென்னிந்திய சினிமா நடிகர்களில் தற்போது ராஷ்மிகாவுக்குதான் அதிக ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 19 மில்லியன் இன்ஸ்டா ஃபாலோயர்களைப் பெற்று நடிகர் சமந்தா முன்னனியில் இருந்த நிலையில் அவரைப் பின்னுக்குத் தள்ளி 20 மில்லியன் ஃபாலோயர்களுடன் இந்த எண்ணிக்கையை ராஷ்மிகா எட்டியுள்ளார். இதற்காக இன்ஸ்டாகிராமில் நன்றியும் தெரிவித்துள்ளார் ராஷ்மிகா. 

Continues below advertisement


இந்தியாவின் "தேசிய க்ரஷ்" என்று அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனாவிற்கு ரசிகர்கள் அதிகம் ,‛கர்நாடக க்ரஷ்’ என்று அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு , தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார் .  2016 ல் ‘கிரிக் பார்ட்டி’ திரைப்படம் மூலம் சினிமா துறையில் அறிமுகம் ஆனார் , பின்பு கீதா கோவிந்தம் திரைப்படம் இவரை இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகியது . சுல்தான் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார். தற்போது மிஷன் மஜ்னு மற்றும் குட்பை படங்களின் மூலம் இந்தியிலும் தற்போது கால்பதித்துள்ளார். 

இதற்கிடையே சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திலும் ராஷ்மிகா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு இயக்குநரான அனுதீப், சிவகார்த்திகேயனின் அடுத்தப்படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தெலுங்கில் இயக்கிய முழு நீள காமெடி படமான ’ஜாதி ரத்னலு’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் பட்டையைக் கிளப்பியது ஜாதி ரத்னலு. அமெரிக்காவிலும் இந்தப் படம் அதிக வசூலைப் பெற்றது. வெளியான ஒரு மாதத்துக்குள் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் டாலர்களை வசூலித்தது. அதாவது ரூ. 7.25 கோடி.  6 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் ஏற்கனவே இந்தியாவில் கிட்டத்தட்ட 70 கோடி ரூபாயை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

ஜாதி ரத்னலுவின் வெற்றியை அடுத்தே அனுதீப்பை சிவகார்த்திகேயன் டிக் செய்துள்ளதாக தெரிகிறது. படத்தில் நாயகியாக ராஷ்மிகா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. கீதா கோவிந்தம் மூலம் பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்துள்ள ராஷ்மிகாவுக்கு தமிழிலும் ரசிகர் வட்டம் உண்டு. இவர் தமிழில் சுல்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில்தான் சிவகார்த்திகேயனுடன் ராஷ்மிகா ஜோடி சேரவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப்படம் தமிழ், தெலுங்கில் வெளியாகும் எனவும், அனிருத் இசையமைக்க வாய்ப்புண்டு என்பதும் கூடுதல் தகவலாக வெளியாகியுள்ளது. 

Continues below advertisement