தனுஷ், விஜய் சேதுபதியை ஓரங்கட்டி முதலிடம் பிடித்த ராஷ்மிகா மந்தனா!

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள டாப் 30 பிரபலமான தென்னிந்திய நடிகர்களில், ராஷ்மிகா மந்தனா முதலிடம் பிடித்துள்ளார். தனுஷ் 13 வது இடத்திலும், விஜய் சேதுபதி 29 வது இடத்திலும் உள்ளனர்.

Continues below advertisement

தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் செயல்பாட்டை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை அவர்களின் சமீபத்திய சமூக ஊடக பதிவுகளில் செப்டம்பர் 30 வரையிலான பதிவுகளை கணக்கில் எடுத்துக்கொண்டு ஒரு லிஸ்டை உருவாக்கியது. அதில் தெலுங்கு முன்னணி நடிகை ராஷ்மிகா தெலுங்கு மற்றும் தமிழின் பெரிய நடிகர்களை எல்லாம் ஓவர் டேக் செய்து முன்னணியில் இருக்கிறார். தமிழ் நடிகரான தனுஷ் 9.33 புள்ளிகள் பெற்று 13வது இடத்திலும், விஜய் சேதுபதி 9.22 புள்ளிகள் பெற்று 29வது இடத்தையும் பிடித்துள்ளனர். பிரபலங்களின் பதிவுகளுக்குக் கிடைக்கும் லைக்குகுள், கமெண்ட்டுகள், அவர்களைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை, வீடியோக்களின் பார்வைகள், பாலோயர்களின் எண்ணிக்கை, பதிவுகளின் ரீச் ஆகியவற்றைக் கணக்கிட்டு இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

தெலுங்கில் முன்னணியில் இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா, பல மொழிகளிலும் தற்போது திரைப்படங்களில் பிஸியாக இருந்து வருகிறார், தென்னகத்தில் அதிகம் பேசப்படும் கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார். ராஷ்மிகா தற்போது பாலிவுட்டில் என்ட்ரி தருவது மூலம், வடக்கிலும் மிகவும் பிரபலமாகி உள்ளார். ஃபோர்ப்ஸ் இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ராஷ்மிகா, சமந்தா, விஜய் தேவரகொண்டா மற்றும் யாஷ் ஆகியோரை தாண்டி மேலே உள்ளார். அவரை சமூக ஊடக பக்கங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையில் வளர்ச்சி விகிதம் மற்றும் கடைசி 25 போஸ்டுகளில் பெறப்பட்ட லைக்குகள் மற்றும் கமெண்டுகளை கருத்தில் கொண்டு இந்த லிஸ்ட் உருவாக்கப்பட்டுள்ளது. அப்படி கணக்கிடப்பட தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, 'மிகவும் செல்வாக்கு மிக்க நடிகர்கள்' பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

'பெல்லி சூப்புலு' மற்றும் 'அர்ஜுன் ரெட்டி' ஆகிய படங்களின் மூலம் புகழ் பெற்ற விஜய் தேவரகொண்டா, பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார், கன்னடத்தின் சென்சேஷனல் ஹீரோ யஷ் அதற்கு அடுத்த இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் சமந்தா ரூத் பிரபு நான்காவது இடத்தையும், அதற்கு அடுத்த இடத்தை அல்லு அர்ஜுனும் பிடித்துள்ளனர். கருத்தில் கொள்ளப்பட்ட அளவீடுகள் சராசரி லைக்குகள், சராசரி கமெண்டுகள், போஸ்டை பார்த்தவர்கள் விகிதம் மற்றும் பிரபலங்களின் சமூக ஊடக அக்கவுண்டுகளில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மற்றும் அதன் மூலம் வரும் தாக்கம் கணக்கிடப்பட்டு ‘கோரஸ் ஸ்கோர்’ மூலம் குறிப்பிடப்படுகிறது, இது மொத்தமாக 10 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படுகிறது. அதில் ராஷ்மிகா 9.88 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார், அதே நேரத்தில் விஜய் தேவரகொண்டா 9.67 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். யாஷ் 9.54 மதிப்பெண்ணும், சமந்தா 9.49 மதிப்பெண்ணும், அதைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் 9.46 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். அல்லு அர்ஜுனின் வரவிருக்கும் ஆக்ஷன் டிராமா ‘புஷ்பா’ படத்தில் ராஷ்மிகா மந்தனா கிராமப்புற பெண்ணாக நடிக்கிறார், அதே நேரத்தில் அவர் ஷர்வானந்தின் ‘ஆதவல்லி உனக்கு ஜோஹருலு’ படத்திலும் நடிக்க உள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola