இன்றைய தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. தனக்கென ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்ட இந்த இளம் நடிகை தற்போது மாலத்தீவில் ரிலாக்ஸ் செய்வதற்காக சென்றுள்ளார்.  சனிக்கிழமை அன்று விமானம் மூலம் மாலத்தீவிற்கு பறந்தவர் அங்கு உல்லாசமாக கடற்கரையில் நேரத்தை செலவிட்டு வருகிறார்.  அவ்வப்போது அங்கு எடுக்கப்பட்ட கிளிக்ஸ்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 


ஜோடியாக மாலத்தீவு சுற்றுலா:


இந்த இளம் நடிகை, இளவட்டங்களின் ஹாட் த்ரோப் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர். படத்தில் எந்த அளவிற்கு கெமிஸ்ட்ரி இருந்ததோ அதே அளவிற்கு இருவருக்கும் இடையில் நிஜ வாழ்விலும் கெமிஸ்ட்ரி செம்மையாக ஒர்க் அவுட் ஆகிறது என கூறி வருகிறார்கள் நெட்டிசன்கள்.



 


ராஷ்மிகா மற்றும் விஜய் தேவர்கொண்டா இருவரும் ஒன்றாக மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர் என்றும் இருவரும் காதலிக்கிறார்கள் என்றும் தகவல்கள் காட்டு தீ போல சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இருவரும் மும்பை விமான நிலையத்தில் ஒருவர் பின் ஒருவராக வந்தனர் என்றும் ஒன்றாக மாலத்தீவிற்கு பறந்தனர் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் அவ்வப்போது டேட்டிங் செய்து வந்தனர் என்றும் கூறப்பட்டது. அந்த வகையில் இப்போது மீண்டும் ஜோடியாக மாலத்தீவிற்கு சென்றுள்ளது அனைவரின் யூகங்களையும் உறுதி செய்து வருகிறது. 






மாஸ் கிளப்பிவரும் ராஷ்மிகா :


நடிகை ராஷ்மிகா தற்போது இளைய தளபதி  விஜய் ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்னர் சுல்தான் திரைப்படத்தில் மூலம் நடிகர் கார்த்தியுடனும், புஷ்பா படத்தின் மூலம் அல்லு அர்ஜுனுடனும் ஜோடி சேர்ந்துள்ளார். முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் ராஷ்மிகா தற்போது பாலிவுட்டிலும் பிஸியாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 






தோல்வியில் துவண்ட விஜய் தேவரகொண்டா  :


மிகுந்த எதிர்பார்ப்புடன் பிரமாண்டமாக விளம்பரம் செய்யப்பட்ட நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியான "லிகர்" திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இப்படத்தின் தோல்வியால் அடுத்து அதே படக்குழுவினரின் தயாரிப்பில் ஒப்பந்தமாகி இருந்த படமும் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.