தமிழ்நாடு : 



  • சமூக நல்லிணக்கத்தினை வலியுறுத்தி 25 கட்சிகள் 44 இயக்கங்கள் இணைந்து நடத்தும்  மனித சங்கிலி போராட்டம் தமிழகம் முழுவதும் நேற்று மாலை நடந்தது. 

  • தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் பரவலாக மழை – அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

  •  14 ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு  வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • மேட்டூர் அணை அதன் முழு கொள்ளவான 120 அடியை எட்டியது. கரையோற பகுதிகளில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

  • புதிதாக 4,000 உதவி பேராசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என உயர்கல்வித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளார். உதவி பேராசிரியர் தேர்வில் கௌரவ பேராசிரியர்களுக்கு 15% வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கி முன்னுரிமை வழங்கப்படும் என உயர்கல்வித் துறை செயலாளர் அறிவித்துள்ளார். 

  • 22% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அர்சு கடிதம். 

  • காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தினை கோவை மற்றும் பெரம்பலூரில் சோதனை அடிப்படையில் அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. 

  •  அதிமுக சார்பில் எந்த முடிவு எடுத்தாலும் தன்னிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என சபாநாயர் அப்பாவுக்கு ஓ.பி.எஸ் கடிதம் எழுதியுள்ளார். 

  • அக்டோபர் மாதம் 30 தேதி கமுதி அருகே நடைபெறவுள்ள தேவர் ஜெயந்தியில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என தகவல்.  


 


இந்தியா:



  • வாக்கு வங்கி அரசியல் எனும் நோய்க்கு தனது அரசு அறுவை சிகிச்சை செய்து வருவதாக குஜராத்தில்நடந்த விழாவில் பிரதமர் மோடி பேச்சு. 

  • உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவருமான முலாயம் சிங் யாதாவ் உடல் நேற்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

  • இந்திய ரயில்வேயின் வருவாய் கடந்த ஆண்டை விட 92% உயர்ந்துள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. சுமார் 43 கோடி பேர் முன்பதிவு செய்து பயணித்துள்ளதாக அறிவித்துள்ளது. 

  • காங்கிரஸ் கூட்டணியில் இணையுமாறு லாலு பிரசாத்க்கு காங்கிரஸின் திக் விஜய் சிங் அழைப்பு விடுத்துள்ளார். 


உலகம் : 



  • சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஐ.எம்.எஃப் அறிவித்துள்ளது. 

  • ரஷ்யாவில் பிரபல சமூக வலைதளமான வாட்ஸ்-ஆப்பிற்கு தடை வித்தித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 


விளையாட்டு : 



  • தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில்,  99 ரன்களில் தென் ஆப்ரிக்காவை சுருட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. தொடரையும் 2-1 எனும் கணக்கில் கைப்பற்றியுள்ளது. 

  • இந்தியாவில் 17 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. முதல் நாள் போட்டியில் அமெரிக்க, சிலி, ஜெர்மனி அணிகள் வெற்றி. 

  • நேற்று நடந்த 9வது சீசன் ப்ரோ கபடி போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.