Rashi Khanna | பழைய போட்டோ.. சொல்லாத கதை.. ஒரு ஸ்னீக் பீக்..! யூடியூப் சேனல் ஆரம்பித்தார் ராஷி கண்ணா

சமூக வலைதளங்களில் எப்போதுமே படு பிஸியாக இருக்கும் நடிக்கை ராஷி கண்ணா, தற்போது யூடியூப் சேனல் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்.

Continues below advertisement

சமூக வலைதளங்களில் எப்போதுமே படு பிஸியாக இருக்கும் நடிக்கை ராஷி கண்ணா, தற்போது யூடியூப் சேனல் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்.

Continues below advertisement

ஏற்கெனவே மேடம், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் தளங்களிலும் சேர்த்து 10 மில்லியனுக்கும் அதிகமாக பாலோயர்களை வைத்திருக்கிறார். 

இப்போது எனக்கே எனக்கா... என்று யூடியூப் சேனல் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். நேற்று (ஜனவரி 30) இது பற்றிய அறிவிப்பை வெளியிட்ட அவர்,  3 நிமிட வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில்,  எனது நிஜ வாழ்க்கையைப் பற்றிய ஒரு ஸ்னீக் பீக்.  நீங்கள் இதை ரசிப்பீர்கள் என நம்புகிறேன். லைக், ஷேர், சப்ஸ்க்ரைப் பண்ணுங்க என்று கேட்டுக் கொண்டுள்ளார். 15 ஆயிரத்துக்கும் மேலான சப்ஸ்க்ரைபர்களை அதற்குள் சேர்த்திருக்கிறார்.

யூடியூப் சேனல் லிங்க்:

ராஷியின் திரைப் பயணம்:

தமிழ் , தெலுங்கு , மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய நடிகையாக அறியப்படுபவர் நடிகை ராஷி கண்ணா. கொரோனா காலக்கட்டத்தில் ராஷி கண்ணா செய்த உதவிகள் அவர் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய மரியாதையையே ஏற்படுத்துவிட்டது. தற்போது பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ராஷி கண்ணா பலருக்கும் உதவிகள் செய்து வருகிறார். தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து , தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார்  உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது அரண்மனை 3, சர்தார், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.

எப்பவுமே ஓபன் டாக்:

நடிகை ராஷி கண்ணா எப்பவுமே சமூக வலைதளங்களில் பளிச் பதில்களை அளிக்கக் கூடியவர். இப்படித்தான் ராஷி கண்ணாவின் சமூக வலைதள பக்கத்தில் ரசிகர் ஒருவர், நெட்டிசன் ஒருவர் “ நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா? ,அல்லது யாரையாவது டேட்டிங் செய்து வருகிறீர்களா ? “ என்ற கேள்வியை கேட்க , அதற்கு பதிலளித்த ராஷி கண்ணா “நான் யாரையும் காதலிக்கவில்லை. அப்படி காதலித்தால் அதை உங்களுக்கு  முன் கூட்டியே சொல்லிவிடுகிறேன் “ என தெரிவித்தார். அதே போல வருங்கால கணவர் குறித்த எதிர்பார்ப்பு என்ன என்பது குறித்து கேட்ட ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ராஷி கண்ணா “ எனக்கு வரப்போகிற கணவர் அழகாக இருக்கிறாரோ இல்லையோ அதெல்லாம் முக்கியமல்ல ஆனால் அவர்  ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவராக இருக்க வேண்டும். ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன்.” என பளிச் பதிலளித்துள்ளார்.

விஜய் பிடிக்கும்!

அதேபோல் எந்த நடிகரை உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்ற கேள்விக்கு “ எனக்கு எல்லா நடிகர்களையும் பிடிக்கும் , தமிழ்ல விஜய் பிடிக்கும், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு  பிடிக்கும். அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து நடனம் ஆட  வேண்டும் என ஆசைப்படுகிறேன். கதாநாயகிகளை பொறுத்தவரையில் நயன்தாரா, சமந்தா, அனுஷ்கா ஆகியோரை ரொம்ப பிடிக்கும்” எனத் தெரிவித்தார். 
ஆகையால் அம்மணி தனது யூடியூப் சேனலில் ரசிகர்களை எங்கேஜ் பண்ணி சப்ஸ்க்ரைபர்ஸை அள்ளுவார் என்று ஜிகினா உலக ரசிகர்கள் வரிசை கட்டி நிற்கின்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola