1983 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா கோப்பையை வென்றது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போட்டியில் இந்திய அணியை கபில் தேவ் தலைமை தாங்கினார். இந்த ஒன்லைனை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம்தான் 83. படத்தில் கபில் தேவாக ரன்வீர் சிங் நடிக்க , அவருடன் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் காதாபாத்திரத்தில்  ஜீவா நடிக்கிறார். இவர்களுடன்  பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.ஏக்தா டைகர்', `பஜ்ரங்கி பாய்ஜான்' படங்களை இயக்கிய கபீர்கான் இந்தப் படத்தை இயக்குகிறார்.ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ரன்வீர் சிங் தீபிகா படுகோன் இந்தப்படத்தை தயாரிக்கின்றனர். படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . 83  படம்  வருகிற கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.







படத்தின் டிரைலரை பார்த்த கபில்தேவ் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் “அதில், “83 படத்தின் ட்ரெய்லரை பார்த்து நான் மிகவும் உணர்ச்சி அடைந்தேன். அதன் ட்ரெய்லர் நன்றாக உள்ளது. எனினும் படம் எப்படி உள்ளது என்று பார்த்த பிறகே என்னுடைய கருத்தை தெரிவிப்பேன். படம் வெளியாகும் வரை நாம் சற்று காத்திருப்போம். ரன்வீர் சிங் ஒரு சிறப்பான நடிகர். அவருக்கு நான் எதுவும் கற்று தர தேவையில்லை. அவர் என்னிடம் சில நாட்கள் தங்கி என்னை பற்றி புரிந்து கொண்டு இந்தப் படத்தில் நடித்துள்ளார்” எனக்கூறினார். அதுவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது .இந்த நிலையில் கபில் தேவ் படத்திற்கு வரி விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் . இதனை பகிர்ந்த படத்தின் இயக்குநர் கபீர் கான் “ உங்களின் இந்த செயல் , இந்தியாவின் தலை சிறந்த வெற்றியை பரப்ப உதவியாக இருக்கும்” என அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.