பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் செருப்பு அணிந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவை, நடிகர் ரன்வீர் சிங் கிண்டல் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டேயின் நடிப்பில் உருவாகியுள்ள லிகர் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. முன்னதாக ஹைதராபாத் மற்றும் மும்பையில் நடந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா இருவரும் கலந்து கொண்டனர். இதில் மும்பையில் நடந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரன்வீர் சிங் பங்கேற்றார்.
அந்நிகழ்ச்சிக்கு விஜய் தேவரகொண்டா சாதாரணமாக வெள்ளை நிறத்தில் ஹவாய் செருப்பு அணிந்து வந்திருந்தார். தனது படத்தின் நிகழ்வுக்கு அவர் இவ்வளவு சாதாரணமாக வந்தது ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செருப்பு அணிந்து வந்ததை சுட்டிக்காட்டிய ரன்வீர் சிங், அண்ணனின் ஸ்டைலைப் பாருங்கள்..நான் அவருடைய டிரெய்லருக்கு வருவதற்குப் பதிலாக அவர் என் டிரெய்லருக்கு வந்திருக்கிறார் என்று தெரிகிறது என கிண்டலாக குறிப்பிட்டார்.
மேலும் ஜான் ஆபிரகாம் தான் வழக்கமாக திரைப்பட நிகழ்வுகளில் செருப்புகளை அணிந்திருப்பார். அவருக்கு அடுத்து விஜய் தேவரகொண்டாவை தான் பார்க்கிறேன் என ரன்வீர் சிங் தெரிவித்தார்.