Ranveer Singh : 2022ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மதிப்பு மிக்க பிரபல பட்டியலில் முதலிடத்தில் ரன்வீர் சிங் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்பரேட் ஆலோசனை நிறுவனமான குரோல் (kroll) ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் மதிப்பு மிக்க பிரபலம் யார் என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது. சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளில் உள்ள பிரபலங்களின் பிராண்டு மதிப்பு அடிப்படையில் இந்த பட்டியலில் பிரபலங்கள் இடம்பெற்று வருகின்றனர். அதன்படி, 2022ஆம் ஆண்டுக்கான பட்டியலை குரோல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நீண்ட காலங்களாகவே இந்த மதிப்புமிக்க பிரபல பட்டியலில் விராட் கோலி இருந்து வந்த நிலையில், அவரை பின்னுக்கு தள்ளி ரன்வீர் சங் தற்போது முதலிடம் பிடித்துள்ளார்.
முதலிட்டத்தில் ரன்வீர் சிங்
தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ரன்வீர் சிங். தனது முதல் படமான "பேண்ட் சர்மா பாராத்" என்ற முதல் படமே சூப்பர் ஹிட் படமாக அமைந்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். எப்பவுமே தனக்கென ஒரு தனி ட்ரெஸ்ஸிங் ஸ்டைல் கொண்டவர் ரன்வீர் சிங். ஃபேஷன், மடலிங் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ரன்வீர் தனது ஹேர் ஸ்டையிலையும் அவ்வப்போது மாற்றிக்கொள்வது அவரின் ஸ்பெஷலிட்டி.
இந்நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மதிப்பு மிக்க பிரபல பட்டியலில் முதலிடத்தில் ரன்வீர் சிங் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் தற்போதை ஒட்டுமொத்த பிராண்டு மதிப்பானது 181.7 மில்லியன் டாலராக உள்ளது. இவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் விராட் கோலி உள்ளார்.
விராட் கோலி இரண்டாம் இடம்
நீண்ட காலமாகவே இந்த பிரபல பட்டியலில் விராட்ட கோலி இருந்து வந்த நிலையில், தற்போது அவரை பின்னுக்கு தள்ளிவிட்டார் ரன்வீர் சிங். தற்போது விராட் கோலியின் பிராண்டு மதிப்பானது 176.9 மில்லியன் டாலராக குறைந்துள்ளது. முன்னதாக விராட் கோலியின் 2020ஆம் ஆண்டு பிராண்டு மதிப்பு 237 மில்லியன் டாலராக இருந்தது.
இதனை அடுத்து, மூன்றாம் இடத்தில் இருப்பவர் பாலிவுட் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான அக்ஷய்குமார். அவரின் தற்போதைய பிராண்டு மதிப்பானது 153.6 மில்லியன் டாலராக உள்ளது. அதனை தொடர்ந்து நான்காம் இடத்தில் ஆலியா பாட்டும், ஐந்தாம் இடத்தில் தீபிகா படுகோன் உள்ளார்.
டாப் 10 பிரபலங்களின் பட்டியல்
- ரன்வீர் சிங் - 181.72 மில்லியன் டாலர்
- விராட் கோலி - 176.9 மில்லியன் டாலர்
- அக்ஷய் குமார் - 153.6 மில்லியன் டாலர்
- ஆலியா பட் - 102.9 மில்லியன் டாலர்
- தீபிகா படுகோன் - 82.96 மில்லியன் டாலர்
- தோனி - 80.3 மில்லியன் டாலர்
- அமிதாப் பச்சன் - 79.08 மில்லியன் டாலர்
- சச்சின் டெண்டுல்கர் - 73.6 மில்லியன் டாலர்
- ஹிருத்திக் ரோஷன் - 71.610 மில்லியன் டாலர்
- ஷாருக்கான - 55.7 மில்லியன் டாலர்
இவர்களை தொடர்ந்து, தென்னிந்திய நடிகர்களான அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அல்லு அர்ஜுன் 31.4 மில்லயன் டாலர் பிராண்ட் மதிப்புடன் 20வது இடத்திலும், நடிகை ராஷ்மிகா மந்தனா 25.3 மில்லியன் டாலர் மதிப்புடன் 25வது இடத்திலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.