1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்றதை வைத்து 83 படம் தயாராகி உள்ளது. கடந்த 26 ஆம் தேதி படத்தின் டீசர் வெளியிடப்பட்ட நிலையில், இன்று ட்ரெய்லர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. படம் வருகிற டிசம்பர் 24-ம் தேதி வெளியாக உள்ளது.
`ஏக்தா டைகர்', `பஜ்ரங்கி பாய்ஜான்' படங்களை இயக்கிய கபீர்கான் இந்தப் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் டிரெய்லர் வெளியான சில மணி நேரங்களிலேயே டிரெண்டாகி உள்ளது. இந்நிலையில், ரியல் ப்ளேயர்கள் யார், ரீல் ப்ளேயர்கள் யார் என்பதை பார்ப்போம்.
கபில் தேவ் – ரன்வீர் சிங்
கேப்டன் கபில் தேவாக ரன்வீர் சிங். அச்சு அசலாக கபிலின் தோற்றத்தை கொண்டு வர ரன்வீர் மிகவும் உழைத்திருக்கிறார். கபிலின் பிரபலமான ஷாட் ஒன்றை அப்படியே புதுப்பித்து இருக்கிறார். ரன்வீருக்கு அறிமுகம் தேவையில்லை. இருந்தாலும், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களின் ஒருவரான அவர், நிறைய ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும், மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருப்பது இந்த படத்திற்காகதான்.
மதன் லால் – ஹார்டி சந்து
நிஜ வாழ்க்கையிலும் கிரிக்கெட்டை கரியராக தேர்வு செய்திருந்த பஞ்சாபை சேர்ந்த ஹார்டி சந்து, ஒரு விபத்து காரணமாக கிரிக்கெட்டை தொடராமல் விட்டிருக்கிறார். பின்பு, பஞ்சாபி மாடல், பாடகர் என மாறிய அவர் மதன் லாலின் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மொஹிந்தர் அமர்நாத் – சாகிப் சலீம்
காலா பட ‘கண்ணம்மா’ புகழ் பிரபல பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியின் தம்பிதான் இந்த சாகிப் சலீம். சில திரைப்படஙக்ளில் நடித்திருக்கும் இவர், 1983 உலகக்கோப்பை அரை இறுதி போட்டியின் ஆட்ட நாயகனான மொஹிந்தர் அமர்நாத்தின் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ரோஜர் பின்னி – நிஷாந்த் தாஹியா
1983 உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த ரோஜர் பின்னி கதாப்பாத்திரத்தில் நிஷாந்த் தாஹியா நடித்திருக்கிறார்.
சுனில் கவாஸ்கர் - தாஹிர் ராஜ் பாசின்
கை போ சே, ஃபோர்ஸ் 3 உள்ளிட்ட படங்களில் நடித்த தாஹிர், சுனில் கவாஸ்கர் ரோலில் நடிக்கிறார்.
யாஷ்பால் ஷர்மா – ஜடின் சர்னா
நெட்ப்ளிக்ஸ் தொடர் ‘சேக்ரட் கேம்ஸில்’ பிரபல கதாப்பத்திரத்தில் நடித்த ஜடின் சர்னா, யாஷ்பால் ஷர்மாவாக நடித்திருக்கிறார்.
ஹையத் கிர்மனி – சாஹில் கட்டார்
1983 ரீல் அண்ட் ரியல் கதாப்பாத்திரஙக்ளிலேயா அச்சு அசலாக சையத் கிர்மனி கதாப்பாத்திர தோற்றத்தை இயல்பாகவே பெற்றிருப்பர் சாஹில் கட்டார். யூட்யூப் சேனலை நடத்தி வந்த இவர், இப்போது பாலிவுட்டில் எண்ட்ரி தந்திருக்கிறார்.
பால்விந்தர் சந்து – அம்மி விர்க்
பஞ்சாபி சினிமாவில் நடித்து வரும் அம்மி விர்க், ஸ்பின் பவுலர் பால்விந்தர் சந்து கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்
கிருஷ்ணமாரி ஸ்ரீகாந்த் – ஜீவா
ஜீவா, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான முகம். சிவா மனசுல சக்தி, நண்பன் என பல ஹிட் படங்களில் நடித்த ஜீவா ஸ்ரீகாந்த்தாக நடித்திருக்கிறார்.
சந்தீப் பாட்டீல் – சிராக் பாட்டீல்
ரியலில் தந்தை - மகன்! தனது தந்தையின் கதாப்பாத்திரத்தையே ஏற்று நடிக்கிறார் இந்த மராத்தி நடிகர் சிராக்
திலீப் வெங்சர்கார் – ஆதினாத் கோத்தரே
1983 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று கொண்டிருக்கும்போதே, காயம் காரணமாக வெளியேறியவர் திலீப் வெங்சர்கார். கடைசி வரை தொடரில் மீண்டும் ஆடவில்லை. இந்த கதாப்பாத்திரத்தில் ஆதினாத் கோத்தரே நடிக்கிறார்.
ரவி சாஸ்திரி – தைர்யா கார்வா
சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த உரி படத்தில் நடித்த தைர்யா கார்வா, ரவி சாஸ்திரியாக நடித்திருக்கிறார்.
கீர்த்தி அசாத் – டிங்கர் ஷர்மா
1983 உலகக்கோப்பை தொடரில் ஒரே ஒரு விக்கெட்தான் கீர்த்தி ஆசாத்துக்கு. ஆனால், அது மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த விக்கெட். இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதிப்போட்டியில் இயான் போத்தாம் விக்கெட்டை எடுத்து இந்தியாவுக்கு பிரேக் த்ரூ கொடுத்தார். அந்த கதாப்பாத்திரத்தில் டிங்கர் ஷர்மா நடிக்கிறார்.
சுனில் வல்சன் – பத்ரி
இந்திய அணி ஸ்குவாடில் மட்டுமே இடம் பிடித்திருந்த சுனில் வல்சன், தொடரில் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. இந்த கதாப்பாத்திரத்தில் யூட்யூப் சேனல் நடிகர் பத்ரி நடித்திருக்கிறார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்