சாவர்க்கர் இருந்த சிறையில் தன்னால் இருபது நிமிடம் கூட இருக்கமுடியவில்லை என்று நடிகர் ரந்தீப் ஹூடா தெரிவித்துள்ளார்.


படமாகும் சாவர்க்கர் வாழ்க்கை


சாவர்க்கரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் திரைப்படம் ’ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’ (Swatantra Veer Savarkar). பாலிவுட் நடிகர் ரந்தீப் ஹூடா இந்தப் படத்தை இயக்கி நடித்து வருகிறார். படத்தின் திரைக்கதையை ரந்தீப் ஹூடாவுடன் இணைந்து உத்கர்ஷ் நைதானி எழுதியுள்ளார். ரந்தீப் ஹூடா ஃபிலிம்ஸ்  லெஜண்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஆனந்த பண்டித் மோஷன் பிக்சர்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளார்கள். இப்படத்தில் நடித்து வரும் ரந்தீப் ஹூடா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாவர்க்கர் குறித்த பதிவு ஒன்றை முன்னதாகப் பகிர்ந்துள்ளார்.  இந்தப் பதிவில் அவர் இப்படி கூறியுள்ளார்.


“பாரத மாதாவின் தலைசிறந்த புதல்வனின் நினைவு தினம் இன்று. தலைவர், தத்துவவாதி, தொலை நோக்கு சிந்தனையாளர். அவரது அறிவுக்கூர்மையும் தைரியத்தையும் கண்டு பயந்த ஆங்கிலேயர்கள் அவரை இந்த 7க்கு 11 அடி சிறையில் இரண்டு முறை அடைத்தனர்.


இப்படத்திற்காக லொகேஷன் பார்க்க சென்றபோது இந்த சிறையில் தன்னந்தனியாக அவர் என்ன மாதிரியான உணர்வுகளை எதிர்கொண்டார் என்பதை புரிந்துகொள்ள நான் என்னை இந்த சிறையில் என்னை அடைத்துக் கொண்டேன். என்னால் இதற்குள் 20 நிமிடம் கூட இருக்க முடியவில்லை. ஆனால் சாவர்க்கர் இந்த சிறையில் 11 ஆண்டுகளைக் கழித்துள்ளார். இப்படியான ஒரு சூழலிலும் விடாப்பிடியாக போராடி புரட்சிக்காக மக்களை ஊக்குவித்தார். இருந்தும் தேசவிரோத சக்திகள் அவரை ஒரு வில்லனாகவே சித்தரிக்க விரும்புகிறார்கள்” என்று அவர் இந்தப் பதிவில் கூறியுள்ளார்.






ரந்தீப் ஹூடா


‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை’ படத்தின் மூலம் பரவலான கவனமீர்த்தவர் ரஞ்தீப் ஹூடா. லவ் ஆஜ் கல், ஹைவே, மர்டர் 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் இந்தி படங்களில் நடித்து வரும் இவர் ஒரு சில ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் ரஞ்தீப் ஹூடா இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார்.




மேலும் படிக்க : Director Suraj: சூப்பர் கதையில் நடிக்க யோசித்த விஜய், அஜித் .. ஹிட் கொடுத்த அர்ஜூன் - என்ன படம் தெரியுமா?  


Sivakumar: நண்பரின் சால்வையை தூக்கி எறிந்தாரா சிவகுமார்? உண்மையில் நடந்தது என்ன?