சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி ஜோடி பாலிவுட் வட்டாரத்தில் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் ஜோடிகளில் ஒருவர் ஆவர். இந்த ஆண்டின் தொடக்கத்தில், இருவரும் சமூக ஊடகங்களில் தங்கள் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின், இணையமெங்கும் அவர்கள் பேச்சாக இருந்தது. அவர்களின் திருமணத்திற்கு அடுத்த நாள், தம்பதியினர் தங்கள் திருமண வீடியோவை வெளியிட்டனர். அதிலிருந்த சில சிறப்பு தருணங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. அவை அந்த சமயதில் பெரிதாக பேசப்பட்டன. 



நெட்ஃபிக்ஸ் நேர்காணல்


சமீபத்தில், ரன்பீர் கபூர் ஒரு நேர்காணலின் போது சித்தார்த் மற்றும் கியாராவின் திருமணத்தில் இருந்து வைரலான தருணங்களை இமிட்டேட் செய்தார். அப்போது எல்லோரையும் போலவே, அவரும் அவர்கள்தான் 'சிறந்த பாலிவுட் ஜோடி' என்று ஒப்புக்கொண்டார். ரன்பீர் சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவுக்காக சமூக ஊடக பிரபலமான ஐஸ்வர்யா மோகன்ராஜுடன் ஒரு நேர்காணலில் இருந்தார். இருவரும் இன்ஸ்டாகிராம் ரீல்களைப் பற்றி விவாதித்தபோது, தான் பார்த்த கடைசி ரீல் சித்தார்த் மற்றும் கியாராவின் திருமண வீடியோ என்று ஐஸ்வர்யா தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்: Thalapathy 68: வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்..? 20 ஆண்டுகளுக்கு பிறகு தளபதியுடன் இணையும் யுவன்..? ரசிகர்கள் ஆர்வம்..!


ரீக்ரியேட் செய்த ரன்பீர்


அப்போது ரன்பீர் அந்த ஜோடியை 'சிறந்த பாலிவுட் ஜோடி' என்று அழைத்தார், "ஆஹா, அவர்கள் உண்மையில் மிகவும் அழகாக இருக்கிறார்கள்" என்று கூறினார். பின்னர், ஐஸ்வர்யா கியாராவைப் போலவே அமர்ந்துகொண்டே நடனமாட, ரன்பீர், சித்தார்த் செய்தது போல வாட்சை தட்டி நேரமாகிறது என்பது போல் சைகை செய்தார். அவரது திருமணத்தில் அது போன்று சித்தார்த் செய்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் திருமண சடங்கில் கையை பிடித்து கொண்டு சுற்றுவது போல நடக்க ஐஸ்வர்யாவின் கையை பிடித்து நடக்க முயன்றார் ரன்பீர். "எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது" என்று ஐஷ்வர்யா கூற, அதற்கு ரன்பீர், "ஓ, எனக்கும்தான்" என்று கேலி செய்தார். உடனே கையை விட்டுவிட்டு சென்று அமர்ந்தார் ரன்பீர்.






முடியை விலக்கி விட்ட ரன்பீர்


அதன் பின்னர் ரன்பீர், சித்தார்த் போலவே சிரித்து காட்டினார். ஷோல்டரை குலுக்கி குலுக்கி சிரிக்க, கியாரா பேசுவது போலவே ஐஷ்வர்யா பேசினார். பின்னர் சித்தார்த் கியாராவின் முடியை விலக்கி விடுவது போல ரன்பீரும், ஐஸ்வர்யாவின் முடியை விலக்கிவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்ட உடனேயே ட்ரெண்ட் ஆனது. பலர் இந்த வீடியோவை அழகாக இருப்பதாக கமென்ட் சேக்ஷனில் எழுதினார்கள். ரன்பீர் கடைசியாக ஷ்ரத்தா கபூருடன் து ஜூதி மைன் மக்கார் படத்தில் நடித்தார். அடுத்து சந்தீப் ரெட்டி வாங்கா'ஸ் அனிமல் படத்தில் நடிக்கிறார். இதில் ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.