என் சருமம் பளபளக்கக் காரணம் மனைவி ஆலியா பட் தான் என்று விழா மேடையில் பெருமிதம் பொங்க ரன்பீர் கபூர் சொல்லியிருக்கிறார். 


பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹரின் இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டு வெளியான ஸ்டூடன்ட் நம்பர் 1 திரைப்படம் தான் ஆலியா நாயகியாக அறிமுகமான முதல் பெண். அதற்கு முன்னர் குழந்தைப் பருவத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். முதல் படத்திற்குப் பின்னர் அவர் கல்லி பாய், டியர் ஜிந்தகி ஆகிய படங்களில் நடித்து பாராட்டைப் பெற்றார். ஆலியா பட் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் கங்குபாய் கத்தியாவாடி என்ற படத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பை ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடியது. ஆர்ஆர்ஆர் படத்திலும் ஆலியா நடித்திருந்தார். ஆனால் அதில் அவரை தனித்துப் பாராட்டும்படி கதாபாத்திரம் அமையவில்லை. ஆலியா பட் பாலிவுட் பிரபலம் ரன்பீர் கபூரை காதலித்து வந்தார்.


பாலிவுட்டின் காதல் ஜோடிகளாக இருந்து, திருமணம் செய்து கொண்ட ஜோடி, ஆலியா பட் - ரன்பீர் கபூர். கிட்டதட்ட 5 வருட காதலிற்கு பிறகு இவர்கள் திருமண பந்தத்தில் இணைந்தனர். திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே தாங்கள் பெற்றோர்களாகவிருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்திருந்தார் ஆலியா. அதன் பிறகு சில மாதங்களில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. தங்களது குழந்தைக்கு ராஹா என்று பெயர் வைத்துள்ளனர்.


இந்நிலையில் அண்மையில் ரன்பீர் கபூர் தனது தாயார் நீத்து கபூருடன் ஒரு புத்தக அறிமுக விழாவில் கலந்து கொண்டார். அந்த விழாவில் அவர் ஸ்டைலான கருப்பு நிற சூட்டில் வந்திருந்தார். அப்போது விழாவில் சற்றே குறும்பாகப் பேசிய ரன்பீர் கபூர், என் சருமம் பளபளக்க என் மனைவி ஆலியா பட்தான் காரணாம். அவர்தான் எனது சரும பராமரிப்பைப் பார்த்துக் கொள்கிறார். என்னை டேனிங்கில் இருந்து தற்காத்துக் கொள்ள ஐஸ்வாட்டரில் முகம் கழுவ வைப்பார். அதேபோல் என்னை தினமும் யோகா செய்ய வைக்கிறார். யோகா செய்தால் சருமம் பளபளப்பாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். அது உண்மையா என்றெல்லாம் தெரியாது. அதைத்தான் நான் பின்பற்றுகிறேன் என்றார்.


காபியை கொட்டிய ரன்பீர்


ரன்பீர் கபூர் விழாவில் ஒரு கையில் மைக், ஒரு கையில் காபி கோப்பை என்று பேசிக் கொண்டிருந்தார். ரொம்பவே ஸ்டைலாக அவர் உலா வர திடீரென காபி கோப்பையில் இருந்து சூடான பானத்தை டிரெஸ்ஸில் தவறுதலாக ஊற்றிக் கொண்டார். நிலைமையை அவர் நன்றாகவே சமாளித்துக் கொண்டார்.