ஹிந்தியில் பிரபல நடிகர்களாக வலம் வரும் ரன்பீர் கபூரும், ஆலியாபட்டும் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


பாலிவுட்டின் ஹாட் ஜோடிகளுள் ஒன்றான ரன்பீர்கபூர் ஆலியா பட் ஜோடி ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத்தகவலை பிரபல செய்தி நிறுவனமான இந்தியா டுடே உறுதியும் படுத்தியுள்ளது. அந்தத் தகவலின் படி, “ அண்மையில் ரன்பீர் கபூரின் அம்மா பாலிவுட்டின் பிரபல ஃபேஷன் டிசைனரான மனிஷ் மல்கோத்ராவை சந்தித்து பேசியிருக்கிறார். இது தவிர ஆலியா பட், ரன்பீர் கபூர் ஆகிய இருவரும், தாங்கள் நடிக்கும் படங்களில் இருந்து இலவச கால்ஷூட்டுகளை கேட்டிருக்கின்றனர். இவர்களது திருமணம் இந்த மாத மத்தியில் நடைபெறலாம் என தெரிய வந்துள்ளது. 


 






இவர்களது கல்யாணம் செம்பூரில் உள்ள ஆ.கே. ஹவுஸில் வைத்து நடைபெற உள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக திருமணம் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் வைத்து நடக்க இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், குடும்பத்தினர் மும்பையில் வைத்தே திருமணத்தை நடத்த ஆசைப்பட்டதால் மும்பையில் வைத்தே கல்யாணம் நடக்க இருப்பதாக தெரிய வருகிறது.


 






ஆலியா பட் நடிப்பில் அண்மையில் ஆர்.ஆர்.ஆர் படம் வெளியானது.  இந்தப்படம் 500 கோடிக்கு மேல் வசுல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்ததாக இவரும் ரன்பீர் கபூரும் இணைந்து நடித்திருக்கும் “பிரம்மாஸ்திரா” திரைப்படம் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாக உள்ளது. ரன்பீர் கபூருக்கு ஷம்ஷேரா படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.