ரன்பீர் கபூர் - ஆலியா பட்
பாலிவுட் சினிமாவில் புகழ்பெற்ற நட்சத்திர தம்பதி ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட். இருவரும் சில காலம் காதலித்து வந்ததைத் தொடர்ந்து கடந்த 2022ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அதே ஆண்டு நவம்பர் மாதம் இந்த தம்பதியினருக்கும் பெண் குழந்தைப் பிறந்தது. இந்த குழந்தைக்கும் ராஹா என்று பெயர் வைத்தனர்.
குழந்தை பிறந்த ஒரு ஆண்டு காலம் முடியப் போகும் வரை ராஹாவை ஊடக கவனம் இலலாமல் மிகவும் கவனமாக பார்த்து வந்தார்கள் இந்த தம்பதியினர். இந்நிலையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது முதன்முறையாக தங்களது மகளின் முகத்தை பொதுவெளியில் காண்பித்துள்ளது இந்த ஜோடி. இதைத் தொடர்ந்து சமூக வலைதளம் முழுவதும் ராஹாவின் புகைப்படங்கள் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் நாளை கொண்டாட ரன்பீர் மற்றும் ஆலியா தங்களது குடும்பத்தினரோடு கொண்டாட சென்ற போது தங்களது மகள் ராஹாவை வெளியுலகத்திடம் அறிமுகப்படுத்தினார்கள்.
தனது மகள் ராஹாவை ரன்பீர் கபூர் துக்கியிருக்க பத்திரிகையாளர்களை நோக்கி அவரை பார்க்கச் சொல்கிறார். ராஹா தனது இரு கைகளாலும் தனது அம்மா அப்பாவின் கன்னங்களைப் பிடித்துக் கொள்வது ரசிகர்களின் மனதை நெகிழ வைத்துள்ளது. ஓவர்நைட்டில் இந்தக் குழந்தையின் புகைப்படங்களும், வீடியோவும் வைரலாகி லைக்ஸ் அள்ளி வருகிறது. மேலும் குழந்தை ராஹா பார்ப்பதற்கு அவரது தாத்தா ரிஷி கபூர் குழந்தையில் இருந்தது போலவே இருப்பதாக இணையவாசிகள் இருவரையும் ஒப்பிட்டு வருகிறார்கள்.
வெற்றிப் படங்கள்