பாலிவுட்டின் கபூர் குடும்பத்தைச் சேர்ந்த பிரபல நடிகர் ரன்பீர் கபூர். தனது நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளத்தினை நாடு முழுவதும் கொண்டுள்ளார்.


இவர் பாலிவுட்டின் முக்கிய  நடிகைகளுள் ஒருவரானவும் இயக்குநர் மகேஷ் பட்டின் மகளுமான ஆலியா பட்டினை இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.


திருமணத்தைத் தொடர்ந்து கடந்த மாதம் ஆலியா பட் தான் கருவுற்றிருப்பதாக அறிவித்தார். எனினும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அலியா, பாலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை நடித்து கலக்கி வருகிறார்.


 






இந்நிலையில், விரைவில் திரைக்கு வர உள்ள 'ஷம்ஷேரா’ பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ரன்பீர் கபூர் தனக்கு ட்வின்ஸ் பிறக்கலாம் என சூசகமாக அறிவித்துள்ளார்.


ரன்பீர் கபூர் நடித்துள்ள ஷம்சேரா திரைப்படம் இந்தி மற்றும் தமிழ் என இரு மொழிகளில் வெளியாக உள்ள நிலையில், இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரன்பீரிடம் இரண்டு உண்மைகளும், ஒரு பொய்யும் சொல்ல வேண்டும் எனக் கேள்வி எழுப்பட்டது.


அதற்கு ரன்பீர் எனக்கு இரண்டு குழந்தை பிறக்கப்போகிறார்கள், நான் புராணப் படமொன்றில் நடிக்கிறேன், நடிப்பதிலிருந்து விலகப் போகிறேன் எனக் கூறியுள்ளார்.


ரன்பீரின் இந்த பதிலில் நடப்பதிலிருந்து விலகுவது மட்டுமே பொய் எனக் கூறி அவர் கூறிய மற்ற இரண்டு உண்மைகளில் இரட்டைக் குழந்தைகள் பற்றியது உண்மை என விவாதித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.


முன்னதாக இதேபோல் தனக்கு 60 வயதாகும் போது தன் குழந்தைக்கு 20 வயதாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவதாகவும், அவர்களுடன் விளையாடவும், பனிச்சறுக்கல்கள் போகவும், மலையேறவும் ஆசைப்படுவதாகவும் ரன்பீர் கூறியிருந்ததும் நெட்டிசன்களிடம் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.


ஹாலிவுட்டில் தற்போது ஹார்ட் ஆஃப் ஸ்டோன் எனும் படத்தில் அலியா நடித்து வருகிறார். மேலும் ரன்பீர்- ஆலியா ஏற்கெனவே இருவரும் நடித்து முடித்த பிரம்மாஸ்திரா படம் வரும் செப்டெம்பர் 9ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.