RamyaPandian Vs Mammootty : மம்மூட்டியுடன் இணையும் நடிகை ரம்யா பாண்டியன்.. பழனியில் ஷூட்டிங்.. டைரக்டர் யாரு தெரியுமா?
Ramya Pandian in Mammootty-Lijo Jose Pellisery film : மம்முட்டியுடன் நடிகை ரம்யா பாண்டியன் இணைய உள்ள படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் லியோ ஜோஸ் பெல்லிஸ்ரி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிகை ரம்யா பாண்டியன் இணைய உள்ளார். இது குறித்தான செய்தியை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரம்யா பாண்டியன், மலையாளத்தில் எனது அடுத்தப்பட அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற இயக்குநர் லியோ ஜோஸ் பெல்லிஸ்ரி இயக்கத்தில் மெகா ஸ்டார் மம்முட்டி நடிப்பில் உருவாக இருக்கும் படத்தில் நடிப்பது எனது கனவை உண்மையாக்கியுள்ளது. ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வருக்கும், குழுவுக்கு எனது நன்றி” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்திற்கு ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாக இருக்கும் இந்தப்படத்தின் ஷீட்டிங் தற்போது பழனியில் சென்று கொண்டிருக்கிறது. மலையாள இயக்குநர் அசோகனும் இந்தப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
முன்னதாக, தமிழில் ‘டம்மி டப்பாசு’ படத்தில் அறிமுகமான ரம்யா பாண்டியன், அதனைத்தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜோக்கர்’படத்தில் நடித்தார். இந்தப் படம் இவருக்கு நல்லப்பெயரை பெற்றுத்தந்தது. அதனைத்தொடர்ந்து குக் வித் கோமாளி, பிக் பாஸ் சீசன் 2 ஆகிய நிகழ்ச்சிகளில் பங்குபெற்றார். இதன் மூலம் மேலும் பிரபலமான ரம்யா பாண்டியன், சூர்யா நடிப்பில் வெளியான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் நடித்தார். இந்த நிலையில்தான் அவர் தற்போது மலையாளப் படத்தில் நடிக்க இருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்