அக்ஷய் குமார் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் "ராம் சேது" படத்தின் டிரைலர் அக்டோபர் 11ம் தேதி வெளியாகும் என்பதை புதிய போஸ்டர்களுடன் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.  


இந்த ஆண்டு மட்டும் அக்ஷய் குமார் நடித்த பச்சன் பாண்டே, சாம்ராட் பிருத்விராஜ் மற்றும் ரக்ஷா பந்தன் ஆகிய மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியாகின. இருப்பினும் அந்த மூன்று படங்களுமே எதிர்பார்த்த அளவிற்கு பாக்ஸ் ஆபிசில் வசூலிக்க முடியவில்லை. நான்காவதாக வெளியான கட்புட்லி திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் திரையிடப்பட்டது. தற்போது அடுத்ததாக தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் "ராம் சேது". 


 



பரபரப்பை ஏற்படுத்திய ராம் சேது டீசர்:


லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், அபிஷேக் சர்மா இயக்கத்தில் அக்ஷய் குமார், ஜாக்குலின் பெர்னாண்டஸ், நஸ்ரத், சத்யதேவ், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ள ஹிந்தி திரைப்படம் ராம் சேது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்துக்களின் நம்பிக்கையான ராமர் பாலம் குறித்த கதை தான் ராம் சேது. பல சர்ச்சைகளை இப்படம் ஏற்படுத்துமா என்ற கேள்வி திரை ரசிகர்கள் மத்தியில் உள்ளது. 


 






 


டிரைலர் ரிலீஸ் அப்டேட் :


அக்டோபர் 25ம் தேதியன்று  தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என்ற அறிவிப்பினை வெளியிட்ட படக்குழுவினர் தற்போது படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். ராம் சேது படத்தின் ட்ரைலர் வரும் செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 11ம் தேதி வெளியாகும் என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பை புதிய போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.   


 






 


அஜய் தேவ்கன் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் வெளியாகவிருக்கும் நகைச்சுவை திரைப்படமான "தாங் காட்" படம் அக்டோபர் 25ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்துடன் மோதவுள்ளது அக்ஷய் குமாரின் ராம் சேது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.