பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு கிடைத்த அமோக வரவேற்பு இந்த வாரம் வெளியாக இருந்த நான்கு படங்களின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30-ஆஃப்க்ஷ்க்வ்ம் தேதி உலகம் முழுவதிலும் பான் இந்திய திரைப்படமாக வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களால் கொண்டாப்பட்டு வருகிறது. அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் அதே பெயரில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. படத்தின் முதல் பாகம் மட்டுமே தற்போது வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 



 


திரையரங்குகள் எங்கும் ஹவுஸ்ஃபுல் காட்சிகள்:
 
இயக்குனர் மணிரத்னத்தின் பல ஆண்டு கனவு தற்போது தான் நிஜமாகியுள்ளது. எம்.ஜி.ஆர் முதல் கமல்ஹாசன் வரை அனைவராலும் மிகவும் விருப்பப்பட்ட திரைப்படம் இதுவாகும். புத்தகத்தை படிக்காதவர்களுக்கு கூட புரியும் படி மிகவும் அழகாக படமாக்கியுள்ளார் இயக்குனர் மணிரத்னம். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, ஜெயராம் மற்றும் பல திரை நட்சத்திரங்கள் தங்கள் கதாபாத்திரங்களை வெகு சிறப்பாக கையாண்டுள்ளனர். அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் காட்சிகள் புக் ஆகி வருகின்றன. வெளியான ஒரு சில நாட்களிலேயே சுமார் 300 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 






ரிலீஸ் தேதி தள்ளிப்போன திரைப்படங்கள்:


ரசிகர்கள், திரை விமர்சகர்கள், திரை பிரபலங்கள் மட்டுமின்றி அனைவரின் பாராட்டையும் பெற்ற பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வருகையால் பல திரைப்படங்களின் ரிலீஸ் தேதி தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுந்தர் .சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் மற்றும் பலர் நடித்துள்ள முக்கோண காதல் கதை படமான "காஃபி வித் காதல்" திரைப்படம் முதலில் அக்டோபர் 7-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் அருண் விஜய் நடிப்பில் அக்டோபர் 5ம் தேதி வெளியாக இருந்த "பார்டர்" திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரவிந்த் சாமியின் "சதுரங்க வேட்டை 2", காசேதான் கடவுளடா உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் தேதியும் மாற்றப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் போன்ற மெகா பட்ஜெட் திரைப்படங்களுக்கு கிடைத்துள்ள அமோகமான வரவேற்பு இது போன்ற சிறிய பட்ஜெட் திரைப்படங்களின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது ஒரு நல்ல முடிவு என கருதுகிறார்கள் சினிமா ஆர்வலர்கள்.