அக்ஷய் குமார் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் "ராம் சேது" படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர் படக்குவினர்.
அக்ஷய் குமார் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் "ராம் சேது" படத்தின் டிரைலர் அக்டோபர் 11ம் தேதி அன்று வெளியாகும் என்பதை ஏற்கனவே போஸ்டர்களுடன் வெளியிட்டு இருந்தனர் படக்குழுவினர். அந்த வகையில் இன்று படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் டிரைலர் வெளியகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி ரிலீஸ் :
பாலிவுட்டில் பச்சன் பாண்டே, சாம்ராட் பிருத்விராஜ் மற்றும் ரக்ஷா பந்தன் படங்களை தொடர்ந்து அக்ஷய் குமார் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் நான்காவது திரைப்படம் "ராம் சேது". அபிஷேக் சர்மா இயக்கியுள்ள இப்படத்தினை தயாரித்துள்ளது லைகா நிறுவனம். ஹிந்தியில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் அக்ஷய் குமாருடன் இணைந்து ஜாக்குலின் பெர்னாண்டஸ், நஸ்ரத், சத்யதேவ், நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அக்டோபர் 25ம் தேதி உலகளவில் உள்ள திரையரங்குகளில் மட்டுமே தீபாவளி ரிலீஸாக வெளியாகவுள்ளது ராம் சேது.
ராமர் பாலம் காப்பாற்றப்பட்டதா?
இந்துக்களின் நம்பிக்கையான ராமர் பாலம் குறித்த கதை "ராம் சேது" என்பது சமீபத்தில் வெளியான டீசர் மூலம் அறியப்பட்டு அது சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது. தொல்பொருள் துறையை சேர்ந்த ஒரு ஆய்வாளராக அக்ஷய் குமார் நடித்துள்ளார். ராமர் பாலத்தை மணல் திட்டு என கருதி அதை உடைக்க மேற்கொள்ளப்படும் திட்டத்தை எப்படி முறியடித்து ராமர் பாலத்தை காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் சுருக்கமான கதைக்களம். அக்ஷய் குமார் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான மற்ற மூன்று படங்களும் தோல்வியை சந்தித்ததால் இப்படம் நிச்சயமாக வெற்றி பெரும் என முழு நம்பிக்கையில் இருக்கிறார் அக்ஷய் குமார். இந்த ஆண்டு தீபாவளியை "ராம் சேது" உடன் கொண்டாடுங்கள்.
அக்ஷய் குமாருடன் போட்டியிடும் அஜய் தேவ்கன்:
அஜய் தேவ்கன் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் வெளியாகவிருக்கும் நகைச்சுவை திரைப்படமான "தாங் காட்" படம் அக்டோபர் 25ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்துடன் மோதவுள்ளது அக்ஷய் குமாரின் ராம் சேது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.