தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ஒரே மகன் ராம் சரணும் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றியால் சர்வதேச அளவில் பிரபலமடைந்துள்ள ராம் சரண் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் என்ற பிரமாண்டமான திரைப்படத்தில் நடித்து வருகிறார். 


நடிகர் ராம் சரணுக்கு கடந்த ஆண்டு 2012ம் ஆண்டு உபாசனா என்பவருடன் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினர் 10 ஆண்டுகளுக்கு பிறகு தங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தான் மனைவி உபாசனா கர்ப்பமாக இருக்கும் தகவலை சோசியல் மீடியா மூலம் பகிர்ந்தார் ராம் சரண். திரை வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் கடந்த ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டாக ராம் சரணுக்கு அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 



துபாயில் வளைகாப்பு :


அந்த வகையில் சமீபத்தில் ராம் சரண் மனைவி உபசனாவுக்கு துபாயில் வளைகாப்பு விழா நடைபெற்றது. நெருங்கிய சொந்தபந்தங்கள் மட்டும் கலந்து கொண்ட இந்த வளைகாப்பு நிகழ்ச்சியின்போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ராம் சரண் மனைவி உபாசனா. இந்த குடும்ப நிகழ்ச்சியின் தீம் முழுவதுமே வெள்ளை நிறத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. குழந்தையை வரவேற்க தயாராக இருக்கும் ஜோடிகளான ராம் சரண் மற்றும் உபாசனா வெள்ளை நிற ஆடையில் மிகவும் அழகாக இருந்தனர். 






ஒயிட் தீம் வளைகாப்பு :


குடும்பத்துடன் சந்தோஷமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் உபாசனா அவரின் ஒயிட் தீம் வளைகாப்பு வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து ' உங்கள் அனைவரின் அன்பிற்கும் மிக்க நன்றி. இப்படி ஒரு சிறப்பான வளைகாப்பு விழாவை கொடுத்ததற்கு என சகோதரிகளுக்கு நன்றிகள்' என போஸ்ட் செய்து இருந்தார். 


மனம் திறந்த உபாசனா :


அந்த வகையில் சமீபத்தில் தான் உபாசனா 10 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பமானது குறித்து மனம் திறந்து பேசியிருத்தார். "மற்றவர்கள் விருப்பப்படுகிறார்கள் என்பதற்காக குழந்தை பெற்று கொள்ளாமல் நாங்கள் விரும்பும் நேரத்தில் குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என முடிவெடுத்து இருந்தோம். அதே போல நடந்தது  தற்போது மிகுந்த மன மகிழ்ச்சியை கொடுக்கிறது" என கூறியிருந்தார்.