தெலுங்கு நடிகர் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனாவுக்கு கடந்த 20 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. தனது குழந்தையை தூக்கியவாறு மகிழ்ச்சியான முகத்துடன் ராம் சரணின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளன. இனிமேல் அப்பாவும் மகளும் சேர்ந்து டாடிஸ் லிட்டில் பிரின்செஸ் வீடியோக்களை வெளியிடுவதற்கு அதிக காலம் இல்லை.


 



Ram Charan Upasana Baby: யார் இந்த தேவதை... பேர் சொல்லும் பூமகள்...! - குழந்தையுடன் புன்னகைக்கும் ராம்சரண் -  வெளியான க்யூட் ஃபோட்டோ


ராம் சரண் - உபாசனா


மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ஒரே மகன் ராம் சரண் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். கடந்த வருடம் வெளியான ஆர் .ஆர். ஆர் திரைப்படத்தின் வழியாக அவர் உலக அளவில் பிரபலமானார். இதனிடையே, ராம் சரணுக்கு கடந்த ஆண்டு 2012 ம் ஆண்டு உபாசனா என்பவருடன் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.


10 ஆண்டுகளுக்குப்பின் அறிவிப்பு:


திருமணமாகி பத்து ஆண்டுகளுக்கு பிறகு தங்களது முதல் குழந்தையை வரவேற்க காத்திருப்பதாக  அன்னையர் தினத்தை முன்னிட்டு 8 மாத பேபி பம்ப் புகைப்படத்தை  இந்த தம்பதியினர் வெளியிட்டு இருந்தனர்.  சரியான நேரத்தில் சரியான காரணத்திற்காக தாய்மை அடைந்ததை எண்ணி பெருமிதம் கொள்வதாக பதிவிட்டு இருந்தார். 




கருமுட்டையை சேகரிப்பு  :


தனது கர்ப்பம் குறித்து உபாசனா அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறிய தகவல் அனைவரையும் ஆச்சரியம் அடைய வைத்தது. ”திருமணத்தின் ஆரம்ப காலகட்டத்தில் நாங்கள் இருவருமே கலந்து எடுத்த முடிவு தான் கருமுட்டையை பாதுகாக்க வேண்டும் என்பது. பலதரப்பட்ட காரணங்களால் நாங்கள் இருவருமே அவரவரின் வேலைகளில் பிஸியாக கவனம் செலுத்த வேண்டியிருந்தது. நிலையான ஒரு இடத்தை அடைந்த பிறகு தான் குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என முடிவு செய்து இருந்தோம். அதன் படி சரியான நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள போகிறோம்” என உற்சாகத்துடன் பேசியிருந்தார் உபாசனா. இதை கேட்ட ரசிகர்கள் அப்போ 10 ஆண்டுகளுக்கு பிறகு ராம் சரண் - உபாசனா தம்பதி சேமித்து வைத்திருந்த கருமுட்டை மூலம் தான் உபாசனா கர்ப்பமாக இருக்கிறாரா? என கேள்வி எழுப்பி இருந்தனர். 


பெண் குழந்தை:


ராம் சரண் - உபசனா தம்பதிக்கு ஐதராபாத்தில்  ஜுப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்ததாக தகவல் வெளியானது. அதைதொடர்ந்து மருத்துவமனை சார்பில் வெளியான அறிக்கையின்படி, ”ராம் சரண் மற்றும் உபாசனா தம்பதிக்கு  20ம் தேதி அதிகாலையில் பெண் குழந்தை பிறந்ததாகவும், தாய்- சேய் இருவரும் நலமாக இருப்பதாகவும்” தெரிவிக்கப்பட்டிர்ந்தது குறிப்பிடத்தக்கது.