இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் வெளியாகியுள்ள கேன் சேஞ்சர் திரைப்படம் ஆன்லைனில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கேம் சேஞ்சர்:
பிரம்மாண்டத்துக்கு பெயர் போனவர் இயக்குனர் சங்கர். இவர் ஜென்டில்மேன், காதலன், முதல்வன், அந்தியன், எந்திரன், சிவாஜி, நண்பன் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர். பிரம்மாண்டம் மற்றும் புதிய தொழில் நுட்பங்களை வைத்து படம் இயக்குவதில் கில்லாடியான இவரின் சமீபத்திய படமான இந்தியன் பாகம் 2 சொல்லிக்கொள்ளும் அளவில் ஓடவில்லை.
இதையும் படிங்க: Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
இந்த நிலையில் தான் இவர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கியாரா அத்வானி, எஸ்.ஜே சூர்யா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர், தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார், பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.
தலைவலி கொடுக்கும் பைரசி:
புதிதாக வெளிவரும் திரைப்படங்களுக்கு பெரும் தலைவலி இருப்பது சட்டவிரோத இணையத்தளங்களான தமிழ் ராக்கர்ஸ் தான். எந்த ஒரு புதிய திரைப்படம் வெளிவந்தாலும் வெளியான சில மணி நேரத்தில் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்து லீக் செய்து விடுகின்றனர், இதனால் பல மாதம் காலமாக படத்தை கடினப்பட்டு எடுத்து , பல பேரின் உழைப்பை சில மணி நேரங்களில் உடைத்து விடுகின்றனர். இதனால் திரையரங்களுக்கு சென்று திரைப்படத்தை பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைகிறது.
லீக்கான கேம் சேஞ்சர்;
தற்போது அந்த வரிசையில் கேம் சேஞ்சர் திரைப்படமும் சேர்ந்துள்ளது. இன்று காலை படமானது வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் தமிழ்ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பல கோடி பணத்தை கொண்டு வெளியாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் ஆன்லைனில் லீக்கானது ராம் சரண் ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.