தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி. தெலுங்கு ரசிகர்களால் மெகாஸ்டார் என்று கொண்டாடப்படும் என்று சிரஞ்சீவியின் மகன் ராம்சரண். மகதீரா மற்றும் ஆர் ஆர் ஆர் படம் மூலமாக இவர் இந்தியா முழுவதும் பிரபலமானவர்.


ராம்சரணுக்கும், அவரது மனைவி உபசன்னாவிற்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது. அவர்களது மகள் கிளின்காரா 6 மாதம் பிறந்ததை முன்னிட்டு, ராம்சரணும், அவரது மனைவியும் மும்பையில் உள்ள  மகாலட்சுமி கோயிலுக்கு வழிபாடு நடத்தினர்.


முதலமைச்சருடன் நேரில் சந்திப்பு:


இந்த நிலையில், மும்பை சென்ற ராம்சரணும் – அவரது மனைவியும் மகாராஷ்ட்ரா முதலமைச்சரை நேரில் சென்று சந்தித்தனர். மகாராஷ்ட்ரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை நேரில் சந்தித்து, பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தனர். முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை நேரில் சந்திக்கச் சென்ற ராம்சரணையும், அவரது மனைவி உபசன்னாவை ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் நேரில் வரவேற்றார்.






மேலும், ஏக்நாத் ஷிண்டேவின் மருமகளும், ஸ்ரீகாந்தின் மனைவியுமான விருஷாலி ஆரத்தி எடுத்து வரவேற்றார். இந்த சந்திப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ராம்சரணின் மனைவி உபசன்னா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


ராம்சரண் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் அவரது தந்தை சிரஞ்சீவி நடித்த கைதி நம்பர் 150, சைரா நரசிம்ம ரெட்டி, ஆச்சார்யா, காட்பாதர் ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார்.