தென்னிந்திய நடிகைகளில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையான ரகுல் ப்ரீத் சிங் இந்த தீபாவளி கொண்டாட்டத்தை தொடர்ந்து மறக்க முடியாத தனது சிறு வயது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
ரகுல் ப்ரீத் சிங் டோலிவுட், கோலிவுட், பாலிவுட் என அனைத்து மொழிகளிலும் சிறப்பாக நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். தீபாவளி தினத்தை தனது வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாத ஒரு தருணமாக மாற்றிய தனது தந்தையை பற்றி சில சுவாரஸ்யமான தகவலை ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார் ரகுல் ப்ரீத். கடைசியாக ரகுல் பட்டாசு வெடித்தது அவர் 5ம் வகுப்பு படிக்கும் போதாம்.
அப்பா கொடுத்த அட்வைஸ் :
ரகுல் 9 முதல் 10 வயது இருக்கும் போது பட்டாசு வெடிப்பதை பார்த்த அவரது அப்பா ரகுலிடம் 500 ரூபாய் நோட்டை கொடுத்து அதை தீயில் எரிக்க சொல்லி இருக்கிறார். அப்பா எதற்காக இப்படி செய்கிறார் என்பது புரியாத ரகுல் அந்த ரூபாய் நோட்டை எரிக்க அதற்கு அவரின் அப்பா காசு கொடுத்து பட்டாசை வாங்கி எரிப்பதற்கு பதிலாக அந்த பணத்தில் ஏழை எளியவர்களுக்கு ஸ்வீட் அல்லது ஏதாவது உதவி செய்தால் மன நிறைவாக இருக்கும் என்பதை புரிய வைத்துள்ளார் ரகுலின் தந்தை.
மனநிறைவு கொடுத்த தானம் :
ரகுல் ஒரு முறை அவரது அப்பா சொன்னது போல் ஏழைகளுக்கு ஸ்வீட் வாங்கி கொடுத்துள்ளார். அந்த நொடி அவர் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோஷம் கிடைத்துள்ளது. அது பட்டாசு வெடிப்பதை காட்டிலும் மனநிறைவை கொடுத்தது என்றும், இன்றும் அந்த நினைவுகள் என் மனதில் நீங்காமல் உள்ளது என்பதையும் மிகுந்த மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்.
சமீபத்திய ரிலீஸ் :
ரகுல் ப்ரீத் சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான டாக்டர் ஜி திரைப்படத்தில் ஒரு மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து "தாங் காட்" திரைப்படத்தில் நடிகர் அஜய் தேவ்கன், சித்தார்த் மல்ஹோத்ரா உடன் ரகுல் ப்ரீத் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் அக்டோபர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வெளியான முதல் நாளே சுமார் 8 கோடி வசூல் செய்துள்ளது இப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.