தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். 2009ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'கில்லி' படம் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர். தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான முதல் படம் 'தடையறத் தாக்க'. அதை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவை காட்டிலும் தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் சிவகார்த்திக்யேன் நடித்த அயலான் படத்தில் ரகுல் ப்ரீத் நடித்திருந்தார். தொடர்ந்து . ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன்  நடிக்கும் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 உள்ளிட்டப் படங்களிலும் நடித்துள்ளார் அவர்.

Continues below advertisement

நடிகை ரகுல் ப்ரீத் சிங், பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் நடிகருமான ஜாக்கி பக்னானியை கடந்த 2024 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அண்மையில் பேட்டி ஒன்றில் ரகுல் ப்ரீத் உடனான திருமண உறவு குறித்து ஜாக்கி பக்னானி பகிர்ந்துகொண்டார். இந்த நேர்காணலில் அவர் " எங்களுக்கு திருமணமாகிவிட்டது. ஆனால் நாங்கள் ஒரு Situationship இருப்பது போல் தான் இருக்கிறது. நாங்கள் இருவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் நேர்மையாக இருக்கிறோம். அதனால் தான் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். ஆனால் எங்கள் உறவில் நான் ரகுலிடம் எனக்கு தோன்றியதை பேசலாம். என்னுடைய எக்ஸ் எனக்கு கால் செய்தார் என்றால். நான் ரகுல் முன்பே அவரிடம் பேசுவேன். நாங்கள் என்ன பேசிக்கொள்கிறோம் என்பதை அவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நான் ஃபோனை ஸ்பீக்கரில் வைத்து பேசுவேன். என் மனைவியிடம் எதையும் நான் மறைக்காத காரணத்தினால் நான் தனியாக தவிப்பதில்லை. 

Continues below advertisement

(Situationship என்பது ஜென் ஸி தலைமுறையினர் இடையே வளர்ந்து வரும் ஒரு கலாச்சாரம். ஒரு நபருடன் நீண்ட கால உறவு பாராட்டும் வாக்குறுதி அளிக்காமல் தற்காலிகமான ஒரு உறவில் இருவரும் இருப்பதை இப்படி குறிப்பிடுகிறார்கள்"