உலகின் மிகவும் உன்னதமான உறவுகளில் அண்ணன் – தங்கை உறவு மிகவும் புனிதமானது ஆகும். இந்தியர்கள் அண்ணன் – தங்கை உறவிற்கு மிகவும் முக்கியத்துவம் அளிப்பவர்கள்.
தமிழ் சினிமாவின் அண்ணன் – தங்கை உறவை மையமாக வைத்து ஏராளமான திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் என்றென்றும் ரசிகர்கள் மனதில் நிற்கும் திரைப்படங்களை கீழே காணலாம்.
பாசமலர்:
அண்ணன் – தங்கை உறவை மையமாக கொண்டு தமிழில் நூற்றுக்கணக்கான படங்கள் வந்தாலும் எப்போதும் நமது மனதிற்கு முதலில் தோன்றுவது பாசமலர் படம். 1961ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நடிகர் திலகம் சிவாஜி – சாவித்ரி அண்ணன் – தங்கையாக நடித்திருப்பார்கள். இந்த படம் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்று அண்ணன் –தங்கை உறவுக்கு இன்றும் இலக்கணமாக இருக்கிறது.
முள்ளும் மலரும்:
தமிழ் சினிமாவில் அண்ணன் தங்கை உறவை வெளிப்படுத்திய படங்களில் முள்ளும் மலருக்கு தனி இடம் உண்டு. மகேந்திரன் இயக்கத்தில் 1978ம் ஆண்டு வெளியான இந்த படம் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற படம். ரஜினிகாந்த் நடித்த காளி கதாபாத்திரம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். ஷோபா ரஜினிக்கு சகோதரியாக நடித்திருப்பார். கிராமத்து பின்னணியில் உருவான இந்த படம் இன்றும் அண்ணன் தங்கை படங்களில் தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளது.
தங்கைக்கோர் கீதம்:
தமிழ் சினிமாவின் சகலகலா வல்லவனாக உலா வந்தவர் டி.ராஜேந்தர். சென்டிமென்ட் காட்சிகளுக்கு பஞ்சமில்லாமல் திரைப்படம் இயக்கும் இவரது இயக்கத்தில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற படம் தங்கைக்கோர் கீதம். 1983ல் வெளியான இந்த படத்தில் சிவகுமார், டி.ராஜேந்தர், ஆனந்த் பாபு, நளினி நடித்திருந்தனர்.
பாசப்பறவைகள்:
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான சிவகுமார் நாயகனாக நடித்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திரைக்கதையில் உருவாகிய திரைப்படம் பாசப்பறவைகள். சிவகுமார், மோகன், ராதிகா, லட்சுமி நடிப்பில் உருவாகிய இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அண்ணன் – தங்கை உறவை மையமாக கொண்டு உருவாகிய இந்த படத்தில் இடம்பெற்ற தென்பாண்டி தமிழே பாடல் இன்றும் அண்ணன் – தங்கை பாடல்களில் தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளது.
கிழக்குச் சீமையிலே:
தமிழ் சினிமாவின் இன்னொரு பாசமலராக கருதப்படும் திரைப்படம் கிழக்குச் சீமையிலே. தென் தமிழகத்தை களமாக கொண்டு பாரதிராஜா இயக்கிய இந்த படத்தில் மிகவும் தத்ரூபமாக அண்ணன் – தங்கை உறவை படமாக்கியிருப்பார்கள். இந்த படத்தில் இடம்பெற்ற தாய்மாமன் சீர் சுமந்து வாரான்டி பாடல் இன்றும் ஒவ்வொரு பூப்புனித நீராட்டு விழா வீடுகளில் ஒலிக்கிறது. விஜயகுமார் – ராதிகா இன்னொரு சிவாஜி – சாவித்ரியாகவே ரசிகர்களால் பார்க்கப்பட்டனர். 1993ல் வெளியான இந்த படம் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.
சமுத்திரம்:
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான அண்ணன் – தங்கை படமான சமுத்திரம் மாபெரும் வெற்றி பெற்றது. சரத்குமார். முரளி, மனோஜ் ஆகியோர்களுக்கு தங்கையாக சிந்து மேனன் நடித்து அசத்தியிருப்பார். 2001ம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
திருப்பாச்சி:
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திருப்பாச்சி திரைப்படம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அண்ணன் – தங்கை திரைப்படம் ஆகும். தங்கைக்காக ரவுடிகளை துவம்சம் செய்யும் அண்ணனாக கமர்ஷியல் படமாக உருவாகியிருந்தாலும், திருப்பாச்சி படத்தில் இடம்பெற்ற அண்ணன் – தங்கை சென்டிமென்ட் காட்சிகள் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இதனாலே படம் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.
நம்ம வீட்டுப் பிள்ளை:
குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாக உலா வரும் சிவகார்த்திகேயனை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்ற திரைப்படம் நம்ம வீட்டுப் பிள்ளை. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் தங்கையாக நடித்திருப்பார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் வெளியான சிறந்த அண்ணன் – தங்கை படமாக இந்த படம் உருவாகியது.
தமிழில் ஏ