Rakhi Sawanth: பிரபல இந்தி திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளியுமான ராக்கி சாவந்த் ஹஜ் உம்ரா புனிதப் பயணத்தை முடித்த பிறகு தனது பெயரை ஃபாத்திமா என மாற்றியுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 


தமிழ் சினிமாவில் கம்பீரம் படத்தில் நடித்த இந்தி நடிகை ராக்கி சாவந்த். சகியே, முத்திரை உள்ளிட்ட படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி உள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி, நடனம் என நன்கு அறியப்பட்ட இவர், சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்தியில் பல படங்களில் நடித்து பிரலபான ராக்கி சாவந்த், பல சர்ச்சைகளில் சிக்கி ட்ரெண்டாகினார். 


எப்பொழுதும் சர்ச்சை வளையத்துக்குள்ளேயே இருக்கும் இவர் அதில் கான் துரானி என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார். ஆனால், சில மாதங்களிலேயே கணவருக்கு எதிராக புகார் அளித்த ராக்கி சாவந்த், அவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதனால் அதில் கான் துரானியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து விவாகரத்து பெற விரும்புவதாக ராக்கி சாவந்த் கூறி வந்தார். 


இந்த நிலையில் சவுதி அரேபியாவுக்கு உம்ரா சென்ற ராக்கி சாவந்த் மும்பை திரும்பினார். ஹிஜாபுடன் மும்பை விமான நிலையத்துக்கு வந்த ராக்கி சாவந்தை பார்த்த ரசிகர்கள், அவர் கழுத்தில் மலர் மாலையை போட முயன்றனர். அதை, மறுத்த ராக்கி சாவந்த் மாலையை கையில் வாங்கி கொண்டார். பின்னர், அவரை ராக்கி சாவந்த் என பத்திரிகையாளர்கள் அழைத்த போது அதைத் தடுத்த அவர், ’என்னை ஃபாத்திமா என அழையுங்கள்’ என்றார். அவரின் இந்த பதிலை கேட்ட அங்கே சலசலப்பை ஏற்படுத்தியது. கணவர் அதில் கானால் இஸ்லாம் மதத்துக்கு மாறிய நீங்கள், சட்டத்துக்காக பெயரை ஃபாத்திமா என மாற்றி கொண்டீர்களா?” என பத்திரிகையாளர்கள் கேட்டனர். 






அதற்கு பதிலளித்த ராக்கி சாவந்த், ’கடவுள் என்னை அழைத்ததால் ஹஜ் உம்ரா சென்றேன். கடவுளின் விருப்பம் இதுதான். சட்டத்துக்காக எனது பெயரை மாற்ற வேண்டும் என்ற தேவை இல்லை’ என்றார். ராக்கி சாவந்தின் இந்த பதிலை கேட்ட திரைப் பிரபலங்கள், அவர் முழுவதுமாக இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். 






மேலும் படிக்க: HBD Yuvan Shankar Raja: ’இசை உலகின் ராஜா’ .. இளைஞர்களின் போதை மருந்து.. யுவன் பிறந்தநாள் இன்று..!


Rajinikanth: ரஜினி சொன்ன பதிலை கேட்டு சோகமான தேவா.. உண்மையை உடைத்த சுரேஷ் கிருஷ்ணா ..!