பாலிவுட்டின் சர்ச்சை குயின், கவர்ச்சி பாம் ராக்கி சாவந்த் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.  என் சகியே, முத்திரை, கம்பீரம் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடிய இந்த கவர்ச்சி சூறாவளிக்கு சோசியல் மீடியாவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவ்வப்போது அவர் செய்யும் சில விஷயங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் ட்ரெண்டிங்காகும். அந்த வகையில் அவரின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 



கடந்த செவ்வாய்க்கிழமை மும்பை விமான நிலையத்துக்கு வந்த ராக்கி சாவந்த் லைம் க்ரீன் கிராப் டாப் மற்றும் ஜீன்ஸ் அணிந்து கொண்டு தனது முகத்தை உடையால் மறைத்து காணப்பட்டார். 


மும்பை விமான நிலையத்தில் காணப்பட்ட ராக்கி சாவந்த், காலணி இன்றி வெறுங்காலுடன் துபாயில் இருந்து பயணம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. அவரின் இந்த புதிய முயற்சி தெரிந்ததும்  அனைவரின்  கவனத்தை பெற்றார். அதற்கான காரணம் குறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கையில் "நடிகர் சல்மான் கான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக நான் மன்னத் (பிரார்த்தனை) வைத்துள்ளேன். அவர் என்னுடைய சகோதரர் போன்றவர். அவருக்காக நான் இலங்கை, துபாயில் காலணி இல்லாமல் வந்துள்ளேன். அவர் திருமணம் செய்து கொள்ளும் வரையில் நான் காலணிகள் அணிய மாட்டேன்" என்றுள்ளார். அவரின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காக ரசிகர்கள் அதற்கு வேடிக்கையாக ரியாக்ட் செய்து வருகிறார்கள். 


 






 


இப்படி ஏதாவது ஒரு விஷயத்தை செய்து அனைவரின் கவனத்தை ஈர்ப்பது ராக்கி சாவந்த் வழக்கம். அந்த வகையில் கடந்த மாதம் தனது காதல் கணவர் ஆதில் துரானியுடன் விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் ராக்கி சாவந்த்துக்கு விவாகரத்து வழங்கியது. அந்த சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் மணப்பெண் கோலத்தில் நடுரோட்டில் மேளதாளத்துடன் செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார் ராக்கி சாவந்த் வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கானது என்பது குறிப்பிடத்தக்கது.