கவர்ச்சிக்கும், சர்ச்சைக்கும் பெயர்போனவர் நடிகை ராக்கி ஷாவந்த். உடையில் தொடங்கி பேச்சு நடனம் என ராக்கியின் பல செயல்பாடுகள் இணையத்தில் வைரலாவது வழக்கம். பல்வேறு திரைப்படங்களில் நடனம் ஆடியுள்ளார் ராக்கி. தமிழில் என் சகியே,முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி கவனிக்க வைத்துள்ளார்.


இணையத்தில் சர்ச்சையானர் என்றாலே அடுத்து செல்லும் இடம் பிக்பாஸ்தான். அப்படியாக இவரும் சல்மான்கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். ஆனால் பிக்பாஸ் டைட்டிலை வென்றதில்லை. சமீபத்தில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டதாகவும் தெரிவித்தார். ஆனால் அந்த திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. கணவர் மீது முதல் மனைவி புகார், பல்வேறு குற்றச்சாட்டுகள் என கணவரை பிரிந்தார் ராக்கி.






காருக்கு வசதி இல்லை..


இப்படியாக சர்ச்சை, சோகம் என பயணித்த ராக்கி ஷாவந்த் சமீபத்தில் கார் தொடர்பாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், என்னிடம் இருக்கும் காரே எனக்கு போதுமானது. புது கார் வாங்க என்னிடம் காசு இல்லை என மனம் நொந்து பேசியிருந்தார். இதனைக் கண்ட அவரது நண்பர்கள் ராக்கிக்கு சிவப்பு நிற பிஎம் டபில்யூ காரை பரிசாக வாங்கிக் கொடுத்துள்ளனர். கிட்டத்தட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள அந்த காரை நண்பர்களிடம் பரிசாக பெற்றுள்ளார் ராக்கி. இது தொடர்பான வீடியோவையும் அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.