தனது பணத்தை தவறாகப் பயன்படுத்தினார், தன்னைத் தாக்கி குடும்ப வன்முறையில் ஈடுபட்டார் என ராக்கி சாவந்த் அளித்த புகாரின் பேரில் அவரது முன்னாள் கணவர் அடில் துராணி நேற்று முன் தினம் (பிப்.10)  கைது செய்யப்பட்டு ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார்.


நிர்வாண வீடியோ


இந்நிலையில் தன் கணவர் தன்னை  நிர்வாண வீடியோக்களை எடுத்து விற்றுள்ளதாகவும்,  மற்றொரு நபரை மூன்றாவது முறையாக தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கோரினார் என்றும் ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார். முன்னதாக தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த ராக்கி சாவந்த் இந்த வழக்கு சைபர் கிரைம் பிரிவில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.


முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்த ராக்கி சாவந்த் ” நான் என் தரப்பு கதையைக் கூறுவதற்காக நான் நீதிமன்றம் வந்துள்ளேன். அடிலுக்கு பெய்ல் கிடைக்கக்கூடாது. நான் எனது மருத்துவ பரிசோதனைகளை முடித்துவிட்டேன், மேலும் அனைத்து ஆதாரங்களையும் ஓஷிவாரா காவல் நிலையத்தில் சமர்ப்பித்துள்ளேன். 


பணம் திருட்டு


நீதிபதியிடம் நியாயம் கேட்க நான் இங்கு வந்துள்ளேன். அடில் என்னை சித்திரவதை செய்து ஏமாற்றிவிட்டார், அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை, எனது வங்கி அறிக்கையையும் கொடுத்துவிட்டு, எனது OTPயை எடுத்து பணத்தை அத்துமீறி திருடி என் நம்பிக்கையை உடைத்தார்" எனத் தெரிவித்தார்.


பாலிவுட்டில் சர்ச்சைகளுக்குப் பெயர் போனவராக அறியப்படும் ராக்கி சாவந்த், 1997ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து வந்த ராக்கி, 2009ஆம் ஆண்டு ’சுயம்வரம்’ நிகழ்ச்சி மூலம் ஓவர்நைட்டில் பிரபலமானார். அந்நிகழ்ச்சி மூலம் தன் கணவரைத் தேர்ந்தெடுத்தார் என்றாலும், இந்நிகழ்ச்சியில் வெற்றியாளரை ராக்கி மணக்கவில்லை.


தொடர்ந்து மும்பை தொழிலதிபர் ரித்தேஷ் என்பவரை 2019ஆம் ஆண்டு ரகசியத் திருமணம் செய்து கொண்டார். பின் தனக்கு திருமணமான விஷயத்தையும் அது முறிந்ததையும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் உடைத்தார்.


2ஆவது திருமணம்


தொடர்ந்து 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் அடில் கானை இரண்டாவது  திருமணம் செய்ததை உறுதிப்படுத்தினார். இந்த ஜோடி 2022இல் திருமணம் செய்து கொண்டது, மேலும் அடிலின் வேண்டுகோளின்படி திருமணத்தை ரகசியமாக வைத்திருந்தட்தாக ராக்கி தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் திருமணமாகி ஓராண்டு கூட முடியாத நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தங்கள் பிரிவை அறிவித்தனர்.


முன்னதாக ராக்கியின் தாய் புற்றுநோயுடன் போராடி உயிரிழந்த நிலையில், முன்னதாக அதில் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


அப்போது தன்னை அதில் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும் தன் முகத்தில் ஆசிட் அடித்துவிடுவேன் எனக் கூறி மிரட்டியதாகவும், தன்னை இஸ்லாமிய மதத்துக்கு மாறும்படி வற்புறுத்தியதாகவும் தெரிவித்தார். முன்னதாக காவல் நிலையத்தில் அடில் மீது புகார் தெரிவிக்க வந்த ராக்கி  திடீரென மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்நிலையி, ராக்கி சாவந்த் அளித்த புகாரின் பேரில் மோசடி, காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அடில் துரானி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.