Raju Vootla Party: ‛இவரு மதுர முத்துவா... இல்ல மொக்க முத்துவா’ ராஜு வூட்ல பார்ட்டியில் கலகல!

Bharathi Kannamma: ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் கலகலப்பாக என்ஜாய் செய்த பாரதி கண்ணம்மா குடும்பம்

Continues below advertisement

Raju Vootla Party: என்ன கண்ணம்மாவையே மாத்திட்டாங்களா... ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சி கொண்டாட்டம் 

Continues below advertisement

தமிழ் சேனல்களில் மிகவும் வித்தியாசமான புதுமையான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் கெட்டிக்காரர்கள் விஜய் தொலைக்காட்சி. வார நாட்களில் சீரியல்களிலும் வார இறுதி நாட்களில் ரியாலிட்டி ஷோ மூலமும் மக்களை கட்டிப்போட்ட ஒரே சேனல் விஜய் டிவி. 

கலாய்த்து தள்ளும் ராஜு வூட்ல பார்ட்டி:

சமீபத்தில் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்தது. அதனை தொடர்ந்து அந்த நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் கலாட்டா நிகழ்ச்சி "ராஜு வூட்ல பார்ட்டி" நிகழ்ச்சி. பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜு ஜெயமோகன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி மிகவும் கலகலப்பாகவும் நகைச்சுவைக்கு அளவில்லாத ஒரு எண்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சியாக இருப்பதால்  ரசிகர்களை எளிதில் கவந்து விட்டது. இந்த ஷோ பார்க்காமல் விஜய் டிவி ரசிகர்கள் வார இறுதியில் தூங்க செல்வதில்லை.

 

 

இந்த கேங் கூட்டத்தில் யாரெல்லாம் இருக்கிறார்கள் :

ஒவ்வொரு வாரமும் பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு என்ஜாய் செய்து வருகிறார்கள். அவர்களை கலாய்க்கவும், டாஸ்க் வைக்கவும், கேள்விகள் கேட்கவும் பிரியங்கா, மதுரை முத்து, தீபா அக்கா, இமான் அண்ணாச்சி, ஷிவா அரவிந், சுனிதா என பலர் இந்த நிகழ்ச்சியில் உள்ளனர். 

பாரதி கண்ணம்மா மாட்டிக்கிட்டாங்க:

அந்த வகையில் இந்த வாரம் விஜய் டிவியின் ஹாட் சீரியலான " பாரதி கண்ணம்மா" சீரியல் குடும்பத்தினர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பாரதி கண்ணம்மா சீரியலின் சௌந்தர்யா, வேணு, பாரதி, வெண்பா மற்றும் கண்ணம்மா ஆகியோர் கலந்து கொண்டனர். மிகவும் கலகலப்பாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 

மதுர முத்துவின் மொக்கையான ஜோக்:

கண்ணம்மாவின் மொக்கையான ஜோக் கேட்டு அங்கு இருந்தே எல்லாரும் நொந்து கொண்டார்கள். கண்ணம்மாவையும் மாத்திட்டாங்கப்பா என பாரதி கூறினார். வெண்பா மதுரை முத்துவை அண்ணா நீங்க பஸ் புடிச்சு ஊருக்கு போங்க என சொல்ல உடனே மதுரை முத்து ஒரு பசுவை எடுத்து வந்தார். ஐயோ ஆண்டவா இந்த இவரு மதுரை முட்டு இல்லப்பா மொக்கை முத்து என கூறவேண்டும் போல இருந்தது ரசிகர்களுக்கு. இருப்பினும் அவரின் அந்த டைமிங் ஜோக் பாராட்டப்படவேண்டியது.  

 

 

மிகவும் கலகலப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சி விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த நிகழ்ச்சியினை ரசித்து பார்க்கிறார்கள். வீட்டில் சண்டே ஸ்பெஷல் சாப்பாடு இருக்குதோ இல்லையோ நிச்சயமா ராஜு வூட்ல பார்ட்டி இருக்கும்.  

 

Continues below advertisement
Sponsored Links by Taboola