பிரபல நகைச்சுவை நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பாலிவுட்டில் பிரபல காமெடியனாக வலம் வரும் நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவ்க்கு மாரடைப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனையடுத்து அவர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது உடல்நலம்தேறி நன்றாக இருக்கிறார் என்று அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

இது குறித்து அவரது மேனஜர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “  இன்று காலை 11- 11:30 மணியளவில் அவர் ட்ரெட்மில்லில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் தற்போது நலமாக இருக்கிறார். கவலைப்படும் படியாக ஏதும் இல்லை. மருத்துவர்கள் தேவையான பரிசோதனைகளை செய்து வருகின்றனர்” என்று கூறியுள்ளார். ராஜூ ஸ்ரீவஸ்தவ் அவரது குடும்பத்தை பார்ப்பதற்காக டெல்லி சென்றுள்ளார். 

 

அடிப்படையில் மிமிக்ரி கலைஞரான நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவ் பாலிவுட் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து, பின்னர் பிரபல காமெடியனாக உயர்ந்தார் .  The Great Indian Laughter Challengeவின் ரன்னரான  இவர் இந்தியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி உட்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.