ரஜினி நடிப்பில் , சிவா இயக்கத்தில் உருவான ‘அண்ணாத்த’ திரைப்படம் உருவான விதம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ஹூட் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அது பின்வருமாறு :


“அனைவருக்கும் வணக்கம்...பேட்ட படம் முடிந்த நிலையில் அந்த படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த படங்களுக்கு முன்னால் பண்ணிய  காலா, கபாலி எல்லாம் வயதான தோற்றத்தில் செய்த திரைப்படங்கள். பேட்ட திரைப்படத்தில் கார்த்திக் சுப்புராஜ் என்னை மிகவும் ஸ்டைலிஷா ரொம்ப அழகா காட்டியிருந்தார். மிகவும் ஸ்டைலாகவும் படம் எடுத்திருந்தார். இந்த பேட்ட திரைப்பட ரிலீஸ் அன்று சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படமும் ரிலீஸானது. இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட். இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. எனக்கு உடனே விஸ்வாசம் திரைப்படம்  இப்படி ஹிட் ஆகிருக்கே அந்த படத்தை பார்க்க வேண்டும் என தயாரிப்பாளர் தியாகராஜனிடம் கேட்டு அந்த படத்தை பார்த்தேன். படத்தை பார்த்தேன் இடைவேளை வந்தது. ஆனாலும் படம் இவ்வளவு சூப்பர் ஹிட் ஆவதற்கு படத்தில் என்ன இருக்கிறது என யோசித்துக்கொண்டிருந்தேன்.


அந்த சூழலில் படம் போக போக கிளைமேக்ஸ் நெருங்க நெருங்க படத்தின் நிறமே மாறிவிட்டது. கிளைமேக்ஸ் அருமையாக இருந்தது. சூப்பர் படம். என்னை அறியமலே கைத்தட்டினேன். தியாகு சாருக்கு வாழ்த்துக்கள் சொல்லி, இயக்குநர் சிவாவை சந்திக்க வேண்டும், அவருக்கு வாழ்த்து கூற வேண்டும் என கூறினேன். சிவா சார் என் வீட்டிற்கு வந்தார். அவரை முன்பு எங்கோ பார்த்திருக்கிறேன், ஒரு சில புகைப்படங்களிலும் பார்த்திருக்கிறேன். அவரு வந்து அவ்வளோ பெரிய உடம்பை வைத்துக்கொண்டு (சிரிக்கிறார் ரஜினி)  அவர் பேசுவது கள்ளம் கபடமற்ற குழந்தை மாதிரி. அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மை இருக்கிறது..அவரை எனக்கு மிகவும் பிடித்துப்போனது..வாழ்த்துக்கள் கூறிய பிறகு எனக்கு ஏதாவது கதை வைத்திருக்கிறீகளா? படம் பண்ணலாமா சார் என கேட்டேன்.விஸ்வாசம் அளவிற்கு ஹிட் கொடுக்கணும் சார் என்றேன். சார் உங்களுக்கு ஹிட் கொடுக்குறது ஈஸி சார் என்றார் சிவா. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. யாரும் என்னிடம் அப்படி கூறியதே இல்லை. ஹிட் பண்ணிடலாம், முயற்சி செய்யலாம் என கூறியிருக்கிறார்களே தவிர, உங்களுக்கு ஹிட் கொடுப்பது ரொம்ப ஈஸி என கூறிய இயக்குநர்களே கிடையாது”







நான் கேட்டேன் ‘எப்படி சார் அவ்வளவு நம்பிக்கையோட சொல்லுறீங்கன்னு..அதற்கு அவர் “இரண்டு விஷயம் சார்”. நல்ல கதையில நீங்க இருக்கனும் என்றார் ..நான் எப்படி என கேட்டேன் .. நீங்களே பாருங்கள் சார் ‘தளபதி’, ‘அண்ணாமலை’. ‘முத்து’ இந்த படங்கள் எல்லாம் நல்ல கதைகள் சார். அதுல நீங்க இருந்தீங்க அதுனாலதான் சார் சூப்பர் ஹிட் என்றார்.. சரி இரண்டாவது என்றேன்...அதற்கு சிவா ‘சார் நீங்க கிராமத்து கதைகளில் நடித்து வெகு நாட்கள் ஆகிவிட்டது..கிராமத்து கதை, கதாபாத்திரம் இது இரண்டும் இருந்தால் போதும் சார் என்றார்.


எனக்கு அவர் சொன்ன விதம் ரொம்ப பிடிச்சு போச்சு..சரி நீங்க ஒரு நல்ல கதை கொண்டுவாங்க என்றேன்.. அதற்கு அவர் எனக்கு ஒரு 15 நாட்கள் அவகாசம் கொடுங்கள் என கேட்டார்...அதன் பிறகு 20 நாட்களில் கதை தயாரகிவிட்டது என்றார்.. வாங்க என்றேன்.. கதை சொல்ல இரண்டரை மணி நேரம் ஆகும் பரவாயில்லையா சார் என்றார்...கண்டிப்பா வாங்க என்றேன்.. எனக்கு 3 பாட்டில் தண்ணீர் வேண்டும் என்றார்...தண்ணீர் பாட்டில்களும் வச்சாச்சு..தண்ணீரை கொஞ்சம் கொஞ்சம் குடித்துக்கொண்டு கதை சொல்ல ஆரமித்தார்.. தண்ணினா சாதாரண தண்ணிங்க ..(சிரிக்கிறார்) நீங்க வேற எதும் நினைச்சிடாதீங்க..கதை சொல்ல சொல்ல ..கிளைமேக்ஸ் வரும் பொழுது என்னை அறியாமலேயே கண்களில் தண்ணீர் வந்துருச்சு..





நான் அதன் பிறகு அவர் கையை பிடித்துக்கொண்டு .. சார் சூப்பர் , இதே மாதிரியே படம் எடுக்கணும் சார் என்றேன்...அதற்கு சிவா இதை விட சூப்பரா எடுப்பேன், நீங்க பாருங்க சார் என்றார்.இந்த படம் உங்க ரசிகர்களுக்கு மட்டுமல்ல , பொதுமக்கள், பெண்கள் என அனைவரும் கூட்டம் கூட்டமாக வந்து இந்த படத்தை பார்ப்பார்கள் , அந்த மாதிரி படம் எடுப்பேன் என்றார்..அதே போல சொன்ன மாதிரி சிவா ’சொல்லி அடிச்சிருக்காங்க’.. அண்ணாத்த மாபெரும் வெற்றி. இந்த படம் பண்ணும் பொழுது நிறைய பிரச்சனைகள் வந்தது..அது எல்லாத்தையும் சிவா சிரிச்சுக்கிட்டே சமாளித்து அவர் ஒத்துழைப்பு கொடுத்தார்..அதுதான் படம் வெற்றியாவதற்கு காரணம்..சிவா மற்றும் குழுவினருக்கு நன்றி..அண்ணாத்த என் வாழ்க்கையில மறக்க முடியாத படம்.. ஏன்னா அந்த படத்துல எனக்கு நிறைய பிரச்சனைகள் வந்தது...அதையெல்லாம் நான் ஹூட் ஆப்ல பகிர்ந்துக்கிறேன்.. நன்றி வணக்கம் “ என தெரிவித்துள்ளார்.